×
 

அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்; போர்ச்சுகலில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்! 

துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது அடுத்த கார் ரேஸில் பங்கேற்பதற்காக அவர் போர்ச்சுக்கல் புறப்பட்டுள்ளார். 

துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது அடுத்த கார் ரேஸில் பங்கேற்பதற்காக அவர் போர்ச்சுக்கல் புறப்பட்டுள்ளார். 

போர்ச்சுக்கலில் அஜித்: 

துபாய் கார் பந்தயத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் போர்ச்சுகலில் நடைபெறவுள்ள  “தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025” கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார். போர்ஷே ஸ்பிரிண்ட்டின் முதல் சுற்றில் பங்கேற்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

இதையும் படிங்க: தல நரைச்சிப்போன காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? - ஏகே ரசிகர்களை பிபி ஏற்றும் சுசித்ரா!

மிகவும் சவாலான மற்றும் தெற்கு ஐரோப்பாவில் பிரபலனான போர்டிமாவோ ரேசிங் சர்க்யூட்டில் களமிறங்க உள்ள அஜித்குமார், இதற்காக தனது ரேசிங் பயிற்சியாளர் மாத்தியூ டெட்ரியைச் சந்தித்துள்ளார். பயிற்சியாளருடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அவரது அணியினர், “போர்ஷே ஸ்பிரிண்ட் சேலஞ்ச் தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 இன் முதல் சுற்றுக்கு தயாராவதற்காக, போர்ச்சுகலின் போர்டிமாவோ ரேசிங் சர்க்யூட்டில் ஏ.கே. தனது ஓட்டுநர் பயிற்சியாளரான மேத்தியூ டெட்ரிக்கை சந்தித்தார்” என பதிவிட்டுள்ளனர். 

கார் பந்தயத்தில் காத்திருக்கும் சவால்: 

24 மணி நேரம் நடைபெற்ற துபாய் கார் ரேஸை விடவும் இது மிகவும் சவாலான போட்டியாகும். தெற்கு ஐரோப்பாவில் உள்ள பிரபலமான கார் ரேஸ் சர்க்யூட்டான போர்டிமாவோ ரேசிங் சர்க்யூட்டில் ஓட்ட தனித்துவமான கார்கள் தேவை. அடுத்ததாக இந்த சர்க்யூட்டில் கார் ஓட்ட விவேகம் மற்றும் வேகத்தைக் கடந்து துல்லியம் மிக, மிக முக்கியமானது. கடைசியாக ஐரோப்பாவின் வானிலை கணிக்க முடியாதது. எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியது என்பதால், எதிர்பாராத சவால்களை அஜித் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித்திற்கு குவியும் பாராட்டுகள்: 

துபாய் கார் ரேஸில் அஜித் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பல்வேறு தரப்பு அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக சினிமாவையும் கடந்து தனது லட்சியத்திற்காக அஜித் படைத்த சாதனையை அவருடைய ரசிகர்கள் இன்றும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். அடுத்ததாக கார் ரேஸ் வீரர்கள் அதிகம் போட்டியிட விரும்பும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற  மற்றும் சவாலான போட்டியில் அஜித் பங்கேற்கவுள்ளதை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா...! ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் அஜித் - வைரல் வீடியோ! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share