×
 

பிரியங்கா சோப்ராவுக்கு ஏமாற்றம்... இறுதி நிமிடங்களில் மாறிய முடிவு!!

ஆஸ்கர் விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

ஆஸ்கர் விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சில் 97வது ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. திரைத்துறையில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு உலகளவில் சிறந்த படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. 

இந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் ஸ்பானிஷ் திரைப்படமான எலிமியா பெரெஸ் நாமினேட் ஆகி இருந்தது. ஆங்கிலம் இல்லாத ஒரு வெளிநாட்டு திரைப்படம் இத்தனை பிரிவுகளில் நாமினேட் ஆனது இதுவே முதல் முறை. இதைபோல் தி ப்டூட்டலிஸ்ட், விக்கட் படங்கள் தலா 10 பிரிவுகளில் நாமினேட் ஆகின. கான்கிளேவ் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்படடிருந்தது.

இந்தியாவின் சார்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட குறும்படமாக “அனுஜா” ஆஸ்கர் நாமினேஷனுக்கு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் 23 விருதுகள் வழங்கப்பட்டன.  சிறந்த படைப்புகள், கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: என்ன மனுஷன்ய்யா... உலகையே திரும்பி பார்க்க வைத்த அனோரா!!

லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடந்த ஆஸ்கர் விழாவில் பிரியங்காவின் குறும்படத்துக்கு விருது கிடைக்கும் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் சிறந்த குறும்படத்துக்கான விருதை ஐ எம் நாட் ஏ ரோபோட் படம் தட்டி சென்றது. இதனால் பிரியங்காவின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட ‘அனுஜா’ குறும்படம் ஆஸ்கர் விருதை தவறவிட்டது. 

இந்தியா சார்பில் நாமினேட் ஆன ஒரே ஒரு குறும்படம் அனுஜா தான். அதற்கும் விருது கிடைக்காததால் பிரியங்காவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரியங்கா சோப்ராவின் தயாரிப்பில் உருவான அனுஜா குறும்படம், டெல்லியில் வசிக்கும் 9வயது சிறுமியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தது.  
அனோரா படம் 5விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

ஷான் பேக்கர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் சிறந்த தழுவல் கதை, சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை என மொத்தமாக 5 பிரிவுகளின் கீழ் விருதுகளை வாங்கி குவித்தது. இந்த விருதுகளை பாலியல் தொழிலாளிகளுக்கு சம்பர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் பேசிய ஷான் பேக்கர் இணையத்தில் டிரெண்டிங் நபராக உள்ளார். இதை தவிர்த்து தி ப்ரூட்டலிஸ், டியூன்2 திரைப்படங்களும் ஆஸ்கர் விருதை பெற்றன.

இதையும் படிங்க: ஒரே படத்துக்கு 5 ஆஸ்கர் விருதுகள்... அப்லாஸ் வாங்கிய ”அனோரா”!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share