×
 

செல்வராகவனின் 19 ஆண்டு கால தவத்திற்கு கிடைத்த பலன்...! வெளியாகிறது "7ஜி ரெயின்போ காலனி-2"..!

19 ஆண்டுகளுக்கு பின் தயாராகிவரும் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி-2 படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் கட்டன்ரைட்டாக இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் 2002ம் ஆண்டு வெளியான "காதல் கொண்டேன்" என்ற திரைபடத்தில் இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே முதலிய படங்களை எழுதி இயக்கி உள்ளார். இவைகளிலும் இவர் இயக்காமல், எழுதி வெளியான படங்கள் என்றால் துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோகினி, மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்கள் எனலாம்.

இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் படங்கள் என்றால் ஒன்று "7ஜி ரெயின்போ காலனி" மறறொன்று "ஆயிரத்தில் ஒருவன்" காரணம் இந்த இருபடங்களும் மிக அற்புதமாகவும் சிந்திக்க கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் 2010ம் ஆண்டு டிரீம் வேலி கார்ப்பரேஷன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ரீமா சென் மற்றும் பல்லாயிரம் துணை நடிக்கர்களை வைத்து உருவான திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்".

இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்காததற்கு காரணம் இதுதான்..! ஆர்.ஜே.பாலாஜி கூறிய பதிலுக்கு கிடைத்த வெகுமானம்..!

தென்னிந்தியாவில் கி.பி 1279 இல், சோழ வம்சத்தின் வீழ்ச்சியின் காரணமாக, அம்மக்களை பாண்டியர்கள் தங்கள் ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றுவதும் மீண்டும் அதற்காக பழிவாங்க அம்மக்கள் படையெடுத்து வருவதையும் உணர்வு பூர்வமாக சித்தரிக்கும் வகையில் உருவான இக்கதையின் படப்பிடிப்பு சவாலாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சாலக்குடி மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முடிந்தது. இவ்வளவு செலவு செய்து பலரது உழைப்பை வாங்கி உருவான இப்படம் சரியாக ஓடாததால் செல்வராகவன் மனம் நொந்து போனார். ஆனால் காலப்போக்கில் இப்படத்தை புரிந்து கொண்ட மக்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு இரண்டாம் பாகம் எடுங்கள் என கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வருகின்ற மார்ச் 14ம் தேதி, ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா மற்றும் அமெரிக்காவிலும் ரீரிஸிஸ் செய்யப்படுகிறது.

இத்தனை மொழிகளில் வெளியாகும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் தமிழில் மட்டும் ரீரிலீஸ் செய்யப்படாமல் இருப்பதிலேயே தெரிகிறது செல்வராகவன் இன்னும் கோபத்தில் இருக்கிறார் என. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தை திரும்ப தரமுடியாது என்றாலும் சைலண்டாக 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை ரசிகர்களுக்காக இயக்கி வருகிறார்.

கடந்த 15 அக்டோபர் 2004 ஆம் ஆண்டு வெளியான "7ஜி ரெயின்போ காலனி" திரைப்படத்தில் முதன் முதலாக தோன்றியவர் தான் நடிகர் ரவி கிருஷ்ணா. இவருடன் சோனியா அகர்வால் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். வேலைக்கு செல்லாத மகன், தன் காதலியின் ஊக்கப்படுத்தும் பேச்சால் வேலைக்கு சேர்ந்து, தந்தையின் அன்பை அழகாக காட்டும் அருமையான படமாக இருந்தது.

இத்திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும், வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது.தனது முதல் படத்திலேயே ரவி கிருஷ்ணா தனது அபார நடிப்பை வெளிக்காட்டி, நடிப்பிற்காக பிலிம்பேரின் சிறந்த ஆண் அறிமுக நடிகர் விருதைப் பெற்றார். அதே சமயம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.

இத்தனை பெருமைகளுக்கு சொந்தமான இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி மாதம் வெளியானது. இந்த நிலையில் எப்பொழுது செல்வராகவன் படப்பிடிப்பை தொடங்குவார் என அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், சத்தமே இல்லாமல் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி, விறுவிறுப்பாக படப்பிடிப்பு சென்று, தற்பொழுது இப்படத்தின் கடைசி இரண்டு வார படப்பிடிப்பு மட்டும் தான் மீதம் உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகாவை தாக்க முற்பட்ட கர்நாடக MLA.. ஒரே ஒரு கடிதத்தில் சோலியை முடித்த ராஷ்மிகா குரூப்..விழுந்த அடி அப்படி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share