நடிகை ராஷ்மிகாவை தாக்க முற்பட்ட கர்நாடக MLA.. ஒரே ஒரு கடிதத்தில் சோலியை முடித்த ராஷ்மிகா குரூப்..விழுந்த அடி அப்படி..!
நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டுவேன் என்று கூறிய MLAவிற்கு பாடம் புகட்டி இருக்கின்றார் நடிகை ராஷ்மிகா.
தென்னிந்திய சினிமாவில் எப்படி இன்றும் ஹீரோ ஹீரோயின்களுக்கு சம்பளம் மாறவில்லையோ அதே போல் சில விழாக்களுக்கும் ஹீரோ ஹீரோயின்களை கட்டாயப்படுத்தும் நடைமுறையும் இன்று வரை மாறவில்லை. சினிமா காரர்களை ஏன் இப்படி அழைக்கழிக்கிறீர்கள் என பலரும் காலம் காலமாக குரல் எழுப்பியும் வருகின்றனர். அரசியல் கட்டளைகளை எதிர்க்க சொந்தமாக கட்சிகளை தொடங்கி தங்களை பாதுகாத்தும் வருகின்றனர் சில சினிமா துறையினர். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் அஜித் ஒரு மேடையில் நடிகர்களை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாகவும், வந்தே தீரவேண்டும் என மிரட்டுவதாகவும் கூறி எங்களுக்கு இந்த அரசியல் வேண்டாம் என தைரியமாக கூறினார். இதனை கேட்ட அனைத்து திரைத்துறையினரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் எழுந்து கைதட்டும் வீடியோக்களையும் பார்த்து இருப்போம். இது போன்ற சம்பவம் தான் தற்பொழுது பூதாகாரமாகியுள்ளது.
இப்படி இருக்க, முதன் முதலில் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானவர் தான் ராஷ்மிகா, அதன் பின் மற்ற மொழிகளில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில் ராஷ்மிகா கர்நாடகாவையும் கன்னட மொழியையும் அவமதிப்பதாக யாரோ ஒருவர் இணையத்தில் சர்ச்சையை கிளப்ப அது பூதாகரமானது. இந்த சூழலில், பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ராஷ்மிகாவுக்கு பல முறை அழைப்பு சென்று உள்ளது. ஆனால் அவர் வர முடியாது என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் தனக்கு காலில் அடிப்பட்டதால் எங்கும் வரமுடியாத சூழலில் தள்ளப்பட்டு இருப்பதாக அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: துணை முதல்வரையே கோபப்படுத்திய ராஷ்மிகா...புது பிரச்சனையா?
ஆனால் இதனை அரசியலாக்க முயற்சிக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிகுமார் கவுடா கணிகா, ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஆவேசமாக பேசி இருந்தார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும், ராஷ்மிகாவை தாக்கும் வகையில் பேசி இருந்தார். இதனை ஒருபுறம் மக்கள் வரவேற்றாலும், சில கன்னட மக்களே, இது சினிமா சார்ந்த விஷயம் இதில் ஏன் உங்கள் அரசியலை கொண்டு வருகிறீர்கள்? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இதனை அறிந்த ராஷ்மிகாவின் கொடவா சமூகத்தினர் கோபத்தின் உச்சிக்கே சென்று உள்ளனர். அதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அதில், "குடகு பகுதியின் பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து உழைப்பால் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கர்நாடகாவில் இருக்கிறது. அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம், அதை வைத்து ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என சொல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் துணை முதல்வருக்கும் தங்களது கண்டனத்தையும் தெரிவித்து இருந்தனர்.
இதனை அடுத்து, மத்திய அரசிடம் இருந்து எம்.எல்.ஏவுக்கு போன் வந்ததா....இல்லை ஆட்கள் வந்தனரா என தெரியவில்லை, ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை என தற்பொழுது மழுப்பி பேசி வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா கணிகா, நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டுவேன் என நான் கூறியது ராஷ்மிகாவை தாக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இல்லை, வாழ்க்கை பாடங்களைப் பற்றி சொன்னேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் அரசியலை சினிமா துறையினரிடமும், சாமானிய மக்களிடம் மட்டுமே காண்பிப்பீர்கள் என்றும் ராஷ்மிகாவுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்க இவர் யார்..? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..!