ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் சங்கர்.. சப்தம் படம் எப்படி இருக்கு தெரியுமா..!
சப்தம் படம் எப்படி இருக்கு என்பதை பற்றி கமெண்ட் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சங்கர்.
தமிழகத்தில் வெளியான மிருகம், ஈரம், அரவான், போன்ற படங்களை நடித்து, மரகத நாணயம் படத்தில் ஹிட் கொடுத்தவர் தான் நடிகர் ஆதி. தற்போது, அறிவழகன் இயக்கத்தில், லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஆதி நடித்துள்ள திரைப்படம் தான் சப்தம்.
இப்படம் தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வரும் நிலையில், இப்படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ்வாக விமர்சனம் வைத்திருந்தார். அதி அவர் கூறுகையில், இந்த வாரம் தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி ஹாரர் மற்றும் சவுண்ட் ஹாரர் என 2 வித்தியாசமான பேய் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரும் விதமாக இல்லை அதுமட்டுமல்லாமல் நல்ல சீன் என்று ஒன்று கூட என் கண்களில் தென் படவில்லை என்றும் சப்தம் படத்தை பற்றி டிரைக்டர் லெட்டர் எல்லாம் கொடுத்து சொல்லும் பொழுது படம் சவுண்ட்-ல் பிரமாண்டம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் சப்தம் படம் ஒரே சத்தமாக இருக்கிறது மற்றபடி அந்த படத்தில் நல்ல கதையோ திரைக்கதையோ இல்லை என காட்டமாக பேசி இருந்தார்.
இதையும் படிங்க: சப்தம் படத்தில் சத்தம் தான் இருக்கு...நெகட்டிவ் கமெண்ட் கொடுத்த ப்ளூ சட்டை..!
மேலும், படத்திற்கு சத்தம் தான் அவசியம் என இயக்குனர், அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் லெட்டர் மூலம் விளக்கம் கொடுத்தார். அதில் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் சத்தம் என்பதால் ஒலியின் அளவை சரியாக வைத்து கொள்ளுங்கள் இல்லை எனில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என்றார்.
இப்படி இருக்க, ஏற்கனவே டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் சங்கர் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரை பாராட்டி, அவரது ட்விட்டர் தளத்தில் "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம்" என கூறி தனது தனித்துவத்தை காட்டி படக்குழுவினரையும் உற்சாக படுத்தினார்.
இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்த படத்திற்கு இயக்குநர் சங்கர் பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்துள்ளார். இதனை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சங்கர், "ஒலி தொடர்பான பேய் படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறை. இயக்குநர் அறிவழகனின் தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பாக உள்ளது. இடைவேளைக்கு முந்தைய காட்சியும், ஒலியும் எதிர்பாராத ஒன்று. ஆதியின் நடிப்பும், தமனின் இசையும் அற்புதமாக உள்ளது. படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்"என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஒருபுறம் ப்ளூ சட்டை படத்தை குறித்து நெகடிவாக பேசுகிறார், மறுபுறம் இயக்குநர் சங்கர் பாராட்டுகிறார் யாரை நம்புவது என குழப்பத்தில் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தியேட்டர் உரிமையாளருக்கு சப்தம் பட இயக்குநர் வேண்டுகோள்..! பார்வையாளர்களை கவர இப்படி ஒரு முயற்சியா - ரசிகர்கள் கிண்டல்..!