பட ப்ரமோஷனில் ப்ரப்போஸ் செய்த இயக்குனர்..! ஆனந்த கண்ணீர் வடித்த காதலியின் வீடியோ வைரல்..!
இணையத்தில் கலக்கி வரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் ப்ரபோசல் வீடியோ ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக உள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்த்த பலருக்கும் படம் பிடித்து போக, தற்பொழுது இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருகின்றனர்.
மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் இலங்கை அகதிகளாக தமிழகத்திற்குள் நுழைபவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை அழகாக காண்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாடு விட்டு நாடு வந்த இந்த குடும்பத்தை தாங்கி பிடிக்கும் குடும்ப தலைவனான சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் அவரது இரண்டு மகன்களை காப்பாற்ற போராடும் விதமாகவும் படம் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ட்ரெய்லரில் யோகிபாபு இருப்பதால் படத்தில் காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமலின் 'தெனாலி' பட இன்ஸ்பிரேஷனில் உருவான கதை தான் "டூரிஸ்ட் ஃபேமிலி"..! சசிகுமார் கல கல பேச்சு..!
இப்படி படத்தில் உள்ள எதிர்பார்ப்புகள் மக்கள் மனதில் அதிகமாக இருக்க, இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் காட்சி வெளியிடப்பட்டது. அதில் சமுத்திரகனி, டி.ஜே ஞானவேல், புஷ்கர் காயத்ரி, விஜய் ஆண்டனி, தமிழரசன் பச்சைமுத்து முதலானோர் கலந்து கொண்டு படத்தை பார்த்து ரசித்தனர். பின்பு படத்தை பார்த்த அனைவரும் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும் அனைவரும் பார்க்க வேண்டிய அழகான குடும்ப படம் எனவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குனரான அபிஷான் ஜீவின்ந்த் படத்தை குறித்து பேசும்பொழுது தனது தோழிக்கு லவ் ப்ரப்போஸ் செய்துள்ளார். அதன்படி அவர் பேசுகையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் அனைவரும் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இந்த படத்தை பார்க்க வரலாம். இந்த நேரத்தில் என்னுடைய அப்பா அம்மாவிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை கூறி கொள்கிறேன். மேலும், இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், படக்குழு ஆட்கள், ஷான் ரோல்டன், சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகிய பலருக்கும் நன்றி.
இப்படியே அனைவருக்கும் நன்றி சொன்ன அவர், தன் தோழியும் காதலியுமான அகிலா இளங்கோவனை பார்த்து " அகிலா உன்னைய எனக்கு 6வதில் இருந்து நன்றாக தெரியும். பின் 10வது படிக்கும் பொழுது நல்ல நெருக்கமான நண்பர்களானோம். இந்த மேடையில் உன்கிட்ட ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் கேட்க நினைக்கிறேன். வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி என்னை திருமணம் செய்து கொள்வாயா..? ஐ லவ் யூ சோ மச். அகி " என தனக்கு கிடைத்த மேடையில் காதலியை அழகாக ப்ரப்போஸ் செய்தார் இயக்குனர். அவரது திடீர் ப்ரப்போசலை எதிர்பாராத அகிலா அங்கேயே ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இந்த நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "நம்பி வாங்க சந்தோஷமா போங்க"..! "டூரிஸ்ட் ஃபேமிலி" படம் குறித்து பேசிய சமுத்திரக்கனி..!