கமலின் 'தெனாலி' பட இன்ஸ்பிரேஷனில் உருவான கதை தான் "டூரிஸ்ட் ஃபேமிலி"..! சசிகுமார் கல கல பேச்சு..!
மக்கள் கொண்டாடும் காமெடி படமாக இருக்கும் இந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் என நடிகர் சசிகுமார் நகைசுவையாக பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இதுவரை பல படங்கள் வந்துள்ளது. அனைத்திலும் காதலுக்காக சண்டை போட்டு ஜெயிப்பது. காதலை கரம்பிடிக்க போராடுவது. காதலிக்காக அடி வாங்குவது. காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் வாங்க போராடுவது. காதலியின் மனதில் தன்னை பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொண்டு வர பல வழிகளில் முயற்சி செய்வது போன்ற படங்களையே பெரும்பாலும் பார்த்திருப்போம். அதே போல் காதலிக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் உதவி செய்ய பலியாடாக கண்டிப்பாக ஒரு நண்பன் சிக்கி இருப்பான் இது தான் இன்றைய சினிமாவில் நடைபெற்று வருவது.
இப்படி இருக்க, தமிழ் சினிமாவில் "சம்போ சிவ சம்போ" என பாட்டு பாடி உண்மையாக காதலிக்கும் ஜோடிகளை சேர்த்து வைக்க போராடும் நல்ல நண்பர்கள் கொண்ட அதிரடி படமாக வந்து, அனைத்து இளசுகளின் ஆழ் மனதிலும் காதலர்களுக்கு கஷ்டம் என்றால் உதவி செய்ய வேண்டும் என்ற அழகான எண்ணத்தை மனதில் விதைத்த படம் தான் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான "நாடோடிகள்".
இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் இவரது வசனங்கள் எல்லாம் ஹிட் தான் குறிப்பாக "குத்துவது நண்பனாக இருந்தாலும் செத்தாலும் வெளியே சொல்ல கூடாது" என்ற வசனத்திற்கு எல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது.
இதையும் படிங்க: கங்கை அமரன் பேச்சுக்கு பிரேம்ஜி பதிலடி..! அஜித்துக்காக சொந்த அப்பாவையே எதிர்த்த தீவிர ரசிகன்..!
இவர் 2008ம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த "சுப்ரமணியபுரம்" படத்தை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தில் வரும் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" என்ற பாடலைஇன்று கேட்டாலும் அனைவரது உள்ளத்தில் இருந்து காதல் மலரும். இதனை அடுத்து " நாடோடிகள்" படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதனை அடுத்து எடுத்த நான்கு படங்களுக்கு இல்லாமல் போனது.
ஈசன், போராளி, கோ, மெரினா ஆகிய படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தாலும் அதற்கு பின்பாக வந்த சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா, கிடாரி, வெற்றிவேல், கொடிவீரன், அசுரவதம், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா, கென்னடி கிளப், பேட்ட, நாடோடிகள் 2, உடன்பிறப்பே, முந்தானை முடிச்சு, எம் ஜி ஆர் மகன், ராஜ வம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, காரி, நான் மிருகமாய் மாற, அயோத்தி, நா நா, நந்தன், கருடன் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் படங்காளாவே அமைந்தது.
இப்படி இருக்க நேற்று இவரது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்த்த பலருக்கும் படம் பிடித்து போக தற்பொழுது படத்தின் வெளியீட்டுக்காக காத்துகொண்டு இருகின்றனர். இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், ஒரு படம் நடிப்பதற்கு முன்பு கண்டிப்பாக நன்றாக வரும் என்கின்ற 100 சதவீத நம்பிக்கையில் தான் படம் செய்கிறோம். ஆனால் அதே நம்பிக்கை, ஊக்கம், ரசிகர்களிடமிருந்து வரும்போதுதான் அது மனதிற்கு நிறைவாகிறது. பள்ளி கல்லூரிகளில் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனை போல இந்த படத்தின் ரிசல்ட்டுக்காக மே-1ம் தேதி வரை நாங்கள் அனைவரும் காத்திருப்போம்.
இந்த படத்தின் இயக்குனருக்கு வயது என பார்த்தால் வெறும் 24 வயதுதான். அதனாலேயே தயாரிப்பாளர்கள் முதல் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நான் தான் வயது முக்கியமில்லை, கதைதான் முக்கியம் என்று நடிக்க ஒப்புக் கொண்டேன். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனாலேயே இந்த படம் எங்கு சென்றாலும் மீண்டும் என்னிடம்தான் வரும் என்று நம்பினேன். அப்படியே வந்தது.
எனக்கு ஜோடி சிம்ரன் என்றதும் எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். பார்ப்பவர்கள் எல்லாரும் சிம்ரன் எப்படிங்க உங்க கூட நடிக்க சம்மதிச்சாங்க என்று கேட்கிறார்கள். ஏன் நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா. அந்த தகுதி எனக்கில்லையா என்ன? என்னைப்போலவே அவரும் கதையை நம்பித்தான் இந்த படத்திற்கு நடிக்க வந்தார். அவர் இப்போதும் ஹீரோயின்தான். இந்த படத்திலும் நான் ஹீரோ, அவர் ஹீரோயின்.
இந்த படத்தின் கதையில் என்ன இருந்ததோ? அதை அப்படியே படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். இதுவே படத்தின் முதல் வெற்றி தான். இந்த படம் முழுக்க முழுக்க இலங்கை தமிழர்கள் இந்தியா வந்து செட்டிலாகும் வேதனைகளை காமெடியாக சொல்லும் படமாக இருக்கும். படம் காமெடியாக இருந்தாலும் அவர்களின் வேதனை அதற்குள்ளாக இருக்கும். இது உலகம் முழுக்க உள்ள நாடிழந்த மக்களுக்கு பொருந்துகிற உண்மை கதை.
நாம் இப்போது தமிழை மறந்து ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால் தமிழ் மொழி, கலாசாரம் இவற்றை விட்டு விடக்கூடாது, தமிழ் மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது இந்த படம். இந்த படத்தை பார்த்து விட்டு பத்து பேராவது தமிழ் கற்க முன்வந்தால் அதுவே இந்த படத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். என பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ரெட்ரோ படத்திற்கு சூர்யா ஹீரோ அல்ல.. இவர் தான்..! கார்த்திக் சுப்பராஜின் மாஸ் அப்டேட்..!