×
 

நடிகை அஞ்சலியின் கிளாமர் புகைப்படங்கள்.. ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோ...!

நடிகை அஞ்சலியின் கிளாமர் புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகைகளுள் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. "அஞ்சலி பாப்பா எங்க இருக்கீங்க நீங்க, எப்படி இவ்வளவு அழகாக இருக்கீங்க" என ரசிகர்கள் கூறும் வண்ணம் அழகை மொத்த உருவமாக கொண்டவர். பார்க்க அழகாக இருந்தாலும் இவரது காந்த பார்வையால் அனைவரையும் ஈர்ப்பதுடன் இவரது நடிப்பில் வாய் பேசுவதை விட கண்கள் பேசுவதாக தெரியும். அந்த அளவிற்கு கண்களால் பல வித்தைகளை செய்பவர். தனது வசிய குரலாலும் பேச்சாலும் ஆளையே மயக்கும் வல்லமை கொண்ட சிறந்த தமிழ் நடிகை தான் அஞ்சலி. 

இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவரது விளம்பரப் படங்களினால் கவர்ந்து இழுக்கப்பட்ட  தெலுங்கு இயக்குனர்கள் அவரை இரண்டு திரைப்படங்களில் நடிக்க வைத்தனர்.  பின் 2007ம் ஆண்டு 'கற்றது தமிழ்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார்.

இதையும் படிங்க: அன்னை தெரசாவா? எதுக்கு இவ்ளோ பில்டப்? பிரபல நடிகையை விளாசிய தமிழா தமிழா பாண்டியன்!!

இதனை அடுத்து 2010ம் ஆண்டு, "அங்காடித் தெரு" என்ற திரைப்படத்தில் கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். காரணம் இப்படத்தில் துணிக்கடைகளில் வேலை செய்யும் கிராமத்து இளைஞர்கள் என்ன துயரங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக காண்பித்த படமாக இருந்தது. ஆதலால் இப்படங்களை நடித்த பிறகு அவருக்கு பல மொழிகளில் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டச்சுழி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம், அரவான், கலகலப்பு, வத்திகுச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பலூன், காளி, சிந்துபாத், லிசா, பேரன்பு, பாவ கதைகள், சைலன்ஸ், நாடோடிகள் 2, நவரசா, ஏழு கடல் ஏழு மலை, மத கஜ ராஜா போன்ற படங்களில் நடித்து வந்தார். 

இதனை அடுத்து, ஏழுமலையன் தயாரிபில் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் அஞ்சலி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில், யோகிபாபு நடித்திருக்கும் திகில் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமான பூச்சாண்டி படம் இந்த வருடம் ஜீலை மாதம் வெளியாக உள்ளது.

இயக்குனர் சர்வேஷ் இயக்கத்தில் அஞ்சலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமான "காண்பது பொய்". இத்திரைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடும் படமாக உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படம் 2026ம் ஆண்டு வெளியாக உள்ளது. அடுத்ததாக, இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்கத்தில் அஞ்சலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஈகை'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் 2026ம் ஆண்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது மனதையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: காதல் தோல்வியில் கிழிந்த பேண்டுடன் வந்த தமன்னா...! காதல் வலியை இப்படியும் அனுபவிக்கலாமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share