×
 

அன்னை தெரசாவா? எதுக்கு இவ்ளோ பில்டப்? பிரபல நடிகையை விளாசிய தமிழா தமிழா பாண்டியன்!!

பிரபல நடிகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அளித்துள்ள பேட்டி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாய் மாறியுள்ளது.

தமிழில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் படங்கள் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்து கிடைத்தது. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதனிடயே காக்க காக்க படத்தில் நடிக்கும் போது ஜோதிகாவுக்கு சூர்யாவுடன் காதல் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 2 குழந்தைக்கு பின் தன் கணவரின் தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் இது சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏனேனில் திருமணத்திற்கு அவர் விதித்த நிபந்தனைகளில் முக்கியமான நிபந்தனை ஜோதிகா திரையுலகை விட்டு விலக வேண்டும் என்பதே. ஆனால் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அதை கண்டுக்கொள்ளாத ஜோதிகா, தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறினார். அதை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, ஏற்கனவே நடித்த சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பெண்களை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள டப்பா கார்டெல் என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந்த வெப் தொடரில் ஜோதிகா, சிகரெட் புகைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் ஜோதிகா பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். இந்நிலையில், நடிகை ஜோதிகாவை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கடுமையாக சாடியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜோதிகா என்ன மம்தா பானர்ஜியா? அன்னை தெரசாவா? ஜெயலலிதாவா? அரைகுறை ஆடையோடு நடிக்க சொன்னாலும் நடிக்கக்கூடிய நடிகைதானே? ஜோதிகா சாதாரண நடிகைதானே? அதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்? சூர்யா - ஜோதிகா திருமணத்தை சிவக்குமார் பலமுறை தடுத்து நிறுத்தினார்.

இதையும் படிங்க: தென்னிந்தியா சினிமா இன்றும் மாறவில்லை.. பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ஜோதிகா ஆவேசம்..!

ஆனால், சூர்யாவின் அழுத்தம் தாங்காமல் ஜோதிகாவை கட்டி வைத்தார். ஆனால், பல கோடி ரூபாய் சொத்துக்களுடன், குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அதற்கு காரணம் சென்னையில் அவருக்கு பிரைவசி இல்லை. சிவக்குமார் ஓட்டல்ல வாங்கி சாப்பாடு சாப்பிடறாராம். உங்களுடைய உழைப்பில் எதுவுமே வேணாம் என்று சொல்லிவிட்டு, சிவக்குமாரும், அவருடைய மனைவியும் வீட்டில் சில காலம் சாப்பிடுவதில்லை என்றுதான் நான் கேள்விப்பட்டேன். இதற்கு காரணம் ஜோதிகாவுடனான சண்டையாம். எந்த நடிகையையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது.

அமலாபால், முதல் திருமணம் செய்தபோது, அவருடைய கணவரின் முக்கிய கோரிக்கையே, திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்பதுதான். ஆனால், கணவரைவிட, நடிப்புதான் முக்கியம் என்று டைவர்ஸ் செய்துவிட்டார் அமலாபால். அதுபோல, ஜோதிகா எந்தவிதமான கட்டப்பாட்டுக்குள்ளும் இருக்க விரும்பவில்லை. கங்குவா படத்துக்கு ரசிகர்களை திட்டி என்ன பயன்? கங்குவா படம் முன்பேயே விக்ரம் நடித்த தங்கலான் படம் அதேபோல வந்தது. அப்படியே தங்கலான் படத்தை பார்த்து காப்பி அடித்துவிட்டது போல இருந்தது கங்குவா. இப்படி படம் எடுத்தால், மக்கள் எப்படி பார்ப்பாங்க.

அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருக்க சிவக்குமார் விரும்புகிறார். ஆனால், கூட்டை உடைத்துக் கொண்டு ஜோதிகா வெளியேறிவிட்டார். கலாச்சாரத்துக்குள் தன்னை சுருக்கி கொள்ள முடியாது என்று ஜோதிகா சொல்லிவிட்டார். ஏன் சென்னையிலிருந்தால், மும்பையிலுள்ள தன்னுடைய அம்மா, அப்பாவை ஜோதிகாவால் கவனித்து கொள்ள முடியாதா? தனக்கு பிரைவசி வேண்டும் என்று நினைக்கிறார். சினிமாவில் சிகரெட் பிடிப்பது , பீர் குடிப்பது எப்படியும் நடிக்கலாம். இனி ஜோதிகாவை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாய் மாறியுள்ளது.

இதையும் படிங்க: ஜோரா ஹீரோயின்கள் வந்தாலும் ஜோதிகா போல வருமா...வயசானாலும் உங்க ஸ்டைல் உங்களை விட்டு போகல ஜோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share