×
 

போதையில் கசமுசா செய்ய நினைத்த நடிகர்..! போலீசிடமிருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக எஸ்கேப்..!

போலீசுக்கு பயந்து தனது தோழிகளுடன் தலைமறைவாகியுள்ளார் பிரபல நடிகர்.

என்றைக்கு நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ வெளியானதோ அன்றிலிருந்து பல நடிகைகள் சினிமாவில் தனக்கு நடந்த துயரங்களையும், அதில் உள்ள பிரபலங்களை குறித்தும் பல குற்றச்சிட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி இருக்க, முதலில் பாடகி சின்மயி, சனம் ஷெட்டி, என பல பிரபலங்கள் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் கழுவி ஊற்றிக்கொண்டு வருகின்றனர். 

இப்படி இருக்க, மலையாள திரைப்படமான ஜன கன மன மற்றும் விக்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் “நான் ஒரு படத்தில் பணியாற்றிய போது அதில் நடித்த ஒரு நடிகர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். என் ஆடையை சரி செய்ய கேரவன் சென்றபோது நான் வந்து உதவி செய்கிறேன் என சொல்லி என்னுடன் வர முற்பட்டார்.

ஆனால் அவரை கடந்து நான் சென்றுவிட்டேன். இதனை அடுத்து மற்றொரு நாள் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து ஏதோ வெள்ளையான நிறம் கொண்ட பொருள் காணப்பட்டது. அதனை பார்த்த உடனே நான் முடிவு செய்துவிட்டேன் அவர் போதை பொருள் தான் பயன்படுத்தி இருக்கிறார் என்று. 

இதையும் படிங்க: நமக்கு சோறுதான் முக்கியம்...! கயாடு லோஹர் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!

இந்த சூழலில், இதுபற்றி விசாரிக்க அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கபட்டுள்ளது. இப்படி இருக்க, குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக வந்த ஷைன் டாம் சாக்கோ பெயர் இதில் அடிபட, போலீசார் உண்மையில் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். 

இந்த நிலையில், கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு இரவு 11மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ரெய்டு செய்ய களமிறங்கினர். அவர்கள் ஒருபுறம் ரெய்டு செய்துகொண்டிருக்க, ஷைன் டோம் ஷாக்கோ தனது தோழிகளுடன் ஹோட்டலில் இருந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடியுள்ளார். எதார்த்தமாக காவல்துறையினர் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவர் தப்பியோடிய காட்சிகள் பதிவாகி உள்ளது. 

இதனை குறித்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய போலீசார், "கொச்சியில் உள்ள ஹோட்டலுக்கு நேற்று காலை 5.30 மணிக்கு ஷைன் டோம் ஷாக்கோ ஜாலியாக வந்து இருக்கிறார். அவர் வந்த சில நிமிடங்களில் அவருடைய பெண் தோழி தனியாக வந்து வேறொரு அறையில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், அன்று மாலை இருவரது நண்பர்களும் ஹோட்டலுக்கு பார்ட்டி கொண்டாட வந்துள்ளனர். இதனை அடுத்து எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எங்களது சிறப்பு குழுவினர் அதிரடியாக ஹோட்டலுக்கு ரெய்டு சென்றனர். ஆனால் அவரை கையும் களவுமாக பிடிப்பதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சைலண்டாக நடைபெற்ற நடிகை அபிநயாவின் திருமணம்..! ஷாக்கில் திரை பிரபலங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share