'கவர்ச்சி காட்டத்தான் லாயக்கு..! புலம்பியவர்களை புரட்டியெடுத்து புரட்சி செய்த அனுஷ்கா..!
நடிகை அனுஷ்கா அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என சொன்னவருக்கு தனது திறமையால் பதிலடி கொடுத்துள்ளார் அனுஷ்கா.
"மகிழ்மதியே உயிர்கொள் என் மகன் வென்றுவிட்டான்...பாகுபலி மீண்டு விட்டான்" என்ற ஒற்றை வார்த்தையில் அனைவரது மனதிலும் தேவசேனாவாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்கா. முத்துக்கள் போன்ற சிரிப்பில், ஆளை வருடி இழுக்கும் கண்களின் அசைவில், இடையின் மடிப்பில், ஆளை கொள்ளை கொள்ளும் பேரழகு உடையவர் தான் அனுஷ்கா. தற்பொழுது நடிகை நயன்தாரா தன்னை இனி "லேடி சூப்பர் ஸ்டார்" என யாரும் அழைக்க வேண்டாம் என கூறியதற்கு காரணமே அனுஷ்கா தான் என்றால் எத்தனை பேருக்கு தெரியும்.
நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் படத்தில் நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா. அவருடைய நீண்ட நாள் இடைவெளிக்கு காரணம், ஒரு படத்தில் நடிக்க அவர் செய்த செயல் தான். 'இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்தார். அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு பலனளிக்க வில்லை. உடல் எடையும் குறைந்த பாடில்லை. குறிப்பாக, பாகுபலி முதல் பாகத்தில் இருந்தது போல, பாகுபலி-2ம் பாகத்தில் அனுஷ்கா ஒல்லியாக வரவேண்டும் என இயக்குனர் ராஜமௌலி எண்ணினார். ஆனால் அனுஷ்கா எவ்வளவோ முயற்சித்தும் ஒல்லியாக முடியாததால் வேறு வழியின்றி அவரை கிராஃபிக்சில் ஒல்லியாக காண்பித்து இருப்பார்.
இதையும் படிங்க: அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு!
இதனால் மிகவும் மனவேதனையிலும் மன அழுத்தத்திலும் இருந்த அனுஷ்கா. "அவ்வளவு தான் இனி நம் வாழ்க்கை" என நினைத்து கொண்டிருந்த வேளையில் அவர் வாழ்க்கையில் கடவுளாய் வந்தார் ஒருவர். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என கூற, முதலில் தயங்கிய அனுஷ்கா அதன் பின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு, நீண்ட நாள் மருத்துவ ஒய்வு பெற்று தற்பொழுது பழைய அனுஷ்காவாக ரசிகர்களுக்கு காட்சியளிக்க தயாராகி இருக்கிறார்.
இந்த சூழலில், பிரபல பத்திரிகையாளர் 'செய்யாறு பாலு' என்பவர் நடிகை நயன்தாரா 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டம் வேண்டாம் என்றதற்கு அனுஷ்கா தான் காரணம் என கூறியிருந்தார். அதன்படி அவர் கூறியதாவது, "நடிகை அனுஷ்கா நடிப்பில் "காட்டி" என்கிற படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என பட்டம் சூட்டப்படவுள்ளது. இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட நயன்தாரா, இது தொடர்பாக படக்குழுவினரிடம், "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை அனுஷ்காவுக்கு போடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
அதற்கு அவர்களோ, நீங்கள் தமிழுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால், அனுஷ்கா தெலுங்கிற்கு லேடி சூப்பர் ஸ்டார், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, நாங்கள் கட்டாயம் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை போடுவோம் எனக் கூறியுள்ளார்கள். இப்படி, அனுஷ்கா லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் வாங்கினால் நம்முடைய மவுசு குறைந்து விடும் என்பதற்காக, இனி என்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என யாரும் அழைக்க வேண்டாம் என கூறி சமாளித்து இருக்கிறார் நயன்தாரா" என ஆவேசமாக கூறியிருந்தார்.
இப்படி இருக்க, மங்களூரில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, யோகா ஆசிரியராக அவதாரம் எடுத்து பின் 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான "சூப்பர்" என்ற படத்தில் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. அதன் பின் தமிழில் இதுவரை ரெண்டு, அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகுபலி 2, எஸ் 3,பிரமாண்ட நாயகன், பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அனுஷ்கா ஷெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பல வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் எமோஷனலாக பேசியிருக்கும் நடிகை அனுஷ்கா, தனது சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது அருந்ததீ தான். அந்த படத்தில் நான் கமிட் ஆனபோது பலர், இது மிகவும் அருமையான படம் அந்த படத்தில் வரும் கதாநாயகி ரோலுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என கூறிவந்தனர்.
அதிலும் மிகவும் முக்கியமான ஒருவர் அப்படத்தின் இயக்குனரிடம் "இவ்வளவு பெரிய படம் எடுக்கிறாய். அதில் எதற்கு அனுஷ்கா. அவர் எல்லாம் கவர்ச்சி காட்ட மட்டும் தான் லாயக்கு" என பேசினார். ஆனாலும் எனது இயக்குனர் என் மீது நம்பிக்கை வைத்து படத்தில் நடிக்க வைத்தார். ஆதலால் என் முழு திறமையையும் படத்தில் காண்பித்து அவருக்கு பெருமை சேர்த்தேன் என அனுஷ்கா கூறியிருக்கிறார்.
இந்த பேட்டியானது தற்பொழுது பல ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதனைப்பார்த்த ரசிகர்கள் "கம் பேக் அனுஷ்கா" என்ற கோஷங்களை இணையத்தில் பரவ வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பின் கூடுதல் கவர்ச்சியோடு கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோ ஷூட்!