×
 

கல்யாணத்துக்கு பின் கூடுதல் கவர்ச்சியோடு கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோ ஷூட்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கருப்பு நிற சேலையில்.... கண்ணை பறிக்கும் கவர்ச்சியோடு எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது தந்தை சுரேஷ் மலையாளி என்றாலும் அம்மா மேனகா தமிழகத்தை சேர்ந்தவர்.
 

எனவே, கீர்த்தி சுரேஷ் தமிழ் - மலையாளம் என இரு மொழிகளையும் நன்கு பேச கூடியவர். 

அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். பின்னர்... மோகன் லால் முக்கிய வேடத்தில் நடித்த கீதாஞ்சலி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் எங்கு தெரியுமா..! பான் இந்திய ஸ்டாராக மாறி இருக்கும் கீர்த்தி..!

பின்னர் தமிழில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் நடித்தார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே , ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

'ரஜினி முருகன்' வெற்றிக்கு பின்னர் தனுஷ், விஜய், விக்ரம், என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மகாநடி' படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

மகாநடி படத்தின் வெற்றிக்கு பின்னர், திரையுலகின் உச்சத்திற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்... மெல்ல மெல்ல தற்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். அட்லீ தயாரிப்பில் வெளியான 'பேபி ஜான்' படத்தில் இவர் நடித்த நிலையில் அந்த படம் தோல்வியை தழுவியது.

அடுத்ததாக ரன்பீர் கபூர் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மொழிகளிலும் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் திருமண உறவில் இணைந்த நிலையில், இவரது லேட்டஸ்ட் ஹாட் சாரீ போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த ஆடை.. கூகுளை ஆட்டம் காண வைத்த ரசிகர்கள்.. வைரல் போட்டோஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share