×
 

ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!

நீண்ட கால இடைவெளிக்கு பின் சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்த சமந்தாவுக்கு மிகப்பெரிய பட்ஜெட் படம் கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோருக்கும் தெரிந்த நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா". இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் என மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது. இப்படி பல படங்களில் நடித்து கடைசியாக புஷ்பாவில் "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியிருப்பார்.

இப்படி திரை துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். 

இதையும் படிங்க: அழகோ அழகு அவள் உடை அழகு..! பிரணிதா அழகில் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

அதன் பின், நீண்ட நாட்களாக சினிமா துறையில் அடியெடுத்து வைக்காமல் விலகி இருந்த சமந்தா தற்பொழுது பல படங்களில் நடித்து வருவதுடன், அனுபமா நடித்து வரும் "பர்தா" படத்தில் பெண்களுக்கு கருத்து சொல்லும் சிறப்பு காட்சியில் நடித்தும் உள்ளார். மேலும் சமீபத்தில் சமந்தா கொடுத்த பேட்டியில், "நான் எனது 20 வயதில் சினிமா மற்றும் மாடலிங் துறையில் நுழைந்தேன். அப்போது என்னுடைய எண்ணமெல்லாம் எத்தனை நிறுவனங்கள் பிராண்டாக நம் முகத்தை தேர்வு செய்கிறார்கள் என்பதில் தான் இருந்தது. ஏனெனில் அதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என நினைத்தேன். 

அதற்காக கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்புக்கு பலனாக, பெரிய... பெரிய... வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் என்னை, தங்கள் பிராண்ட் தூதராக விரும்பி தேர்வு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அது மிகவும் தவறு என தற்பொழுது உணர்கிறேன். எனக்கு சரியானது எனத் தோன்றுவதைதான் நான் பின்பற்ற வேண்டும். அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் விளம்பரங்கள் குறித்தும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன். அதில் மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையிலேயே அதில் நடிக்க ஒப்புகொள்கிறேன்". என தெரிவித்து இருந்தார். 

இப்படி பட்ட சூழலில் இதுவரை நடிகை சமந்தா, தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி, தங்க மகன், 10 எண்றதுக்குள்ள, பெங்களூர் நாட்கள், தெறி, 24, மெர்சல், யூ டர்ன், நடிகையர் திலகம், சீமராஜா, இரும்பு திரை, ஓ. பேபி, சூப்பர் டீலக்ஸ், புஸ்பா (தி ரைஸ்), யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல், குஷி, சகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

இந்த நிலையியல், ரூ.1300 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை சமந்தா. இந்த நிலையில், புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் புதிய படமானது ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திலும் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


இதன்மூலம் ரூ.1300 கோடி பட்ஜெட் படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் நடிகை சமந்தா என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: பல கோடி பணத்தை மக்கள் நலனுக்காக இழந்தேன்... நடிகை சமந்தா உருக்கமான பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share