×
 

பல கோடி பணத்தை மக்கள் நலனுக்காக இழந்தேன்... நடிகை சமந்தா உருக்கமான பேச்சு..!

தனது சிறுவயது செயலுக்கு தன்னிடமே மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

பார்க்க குட்டி குஷ்பூவை போல் இருந்து கொண்டு இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் நடிகர் விஜயுடன் வெளியான 'கத்தி' திரைப்படத்தில் "நான் குளிச்சிட்டு, ஃபிரஷ் பண்ணிட்டு வரேன்... பாய்" என குழந்தை தனமாக பேசி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார்.

பின் 'தெறி' படத்தில் நடிகர் விஜயிடம் சாகும் தருவாயில் "நான் உனக்கு எப்படி பட்ட மனைவி" என கேட்டு அனைவரையும் கலங்க செய்தவர். அதே போல் 'மெர்சல்' திரைப்படத்தில் நடிகர் விஜயை பார்த்து "டேய் தம்பி உன்னதாண்டா வாடா.. எனவும் அக்கா உனக்கு ரோஸ்மில்க் வாங்கித்தரேண்டா" எனவும் கூறி பலரது மனதில் ஆழமாக பதியப்பட்டார். 

இப்படி, தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி, தங்க மகன், 10 என்றதுக்குள்ள, பெங்களூர் நாட்கள், தெறி, 24, மெர்சல், யூ டர்ன், நடிகையர் திலகம், சீமராஜா, இரும்பு திரை, ஓ. பேபி, சூப்பர் டீலக்ஸ், புஸ்பா (தி ரைஸ்), யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல், குஷி, சகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சமந்தா. 

இதையும் படிங்க: சினிமாவை விட குடும்ப உறவுகள் தானே நிரந்தரம்..! மனம் விட்டு பேசிய நடிகை ரம்பா..!

ஆனாலும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்ததை கண்டு வருத்தமடைந்த சமந்தா, பல நாட்களுக்கு பின் தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார். பின் பல மேடைகளில் எரிய சமந்தா, ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்து உங்கள் அன்புக்கு நான் என்ன தருவேனோ என கண்கலங்கி பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல், தற்பொழுது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சமந்தா சோலோவாக பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ச்சியடைந்தும் வருகிறார்.  

இந்நிலையில், பிரபல தனியார் நிறுவனத்திற்கு சமந்தா அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் "நான் எனது 20 வயதில் சினிமா மற்றும் மாடலிங் துறையில் நுழைந்தேன். அப்போது என்னுடைய எண்ணமெல்லாம் எத்தனை நிறுவனங்கள் பிராண்டாக நம் முகத்தை தேர்வு செய்கிறார்கள் என்பதில் தான் இருந்தது. ஏனெனில் அதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என நினைத்தேன். அதற்காக கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்புக்கு பலனாக, பெரிய... பெரிய... வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் என்னை, தங்கள் பிராண்ட் தூதராக விரும்பி தேர்வு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், இப்போது தான் தெரிகிறது நான் தவறான பொருள்களை தேர்வு செய்து, அதற்காக நடித்து, பல தரப்பட்ட மக்கள் மனதில் தவறான உதாரணம் அளிப்பவளாக இருந்தேன் என்று. ஆம், அந்த சிறு வயதில் முட்டாள்தானமாக செயல்பட்ட சமாந்தாவிடம், இப்பொழுது பக்குவமாக யோசிக்கும் இந்த சமந்தா மன்னிப்புக் கேட்க வேண்டும். என் தேர்வுகள் குறித்து நான் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுது இருக்கிறேன்.

எனக்கு சரியானது எனத் தோன்றுவதைதான் நான் பின்பற்ற வேண்டும். அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் விளம்பரங்கள் குறித்தும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன். அதில் மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையிலேயே அதில் நடிக்க ஒப்புகொள்கிறேன். இளம் வயதிலிருந்து என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வெற்றி என்பது எப்படியும் நம்மை வந்து சேரும். அதற்காக பல தவறான முன்னுதாரணங்களை நமக்கு நாமே அமைத்துவிடக் கூடாது. கடந்த வருடம் நான் கிட்டத்தட்ட 15 பிராண்டுகளை வேண்டாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். அதனால் கோடிக்கணக்கானப் பணத்தை இழந்துவிட்டேன். அதனால் எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஏனெனில் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுனுக்கு அவர் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன சமந்தா..! வியப்பில் ரசிகர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share