×
 

மகனை இழந்த பாரதிராஜா..! இதற்கு அடிமையாவார் என நினைக்கவில்லை - சகோதரர் ஜெயராஜ் வேதனை..!

மகனை நினைத்து குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாகி இருக்கிறார் பாரதிராஜா என அவரது சகோதரர் வேதனையுடன் கூறியுள்ளார். 

சமீபத்தில் நடந்த இரண்டு பிரபலங்களின் மரணம் அனைவரையும் மனதுருக செய்தது. இந்த இழப்பானது பல ரசிகர்களை பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக நடிகரும் கராத்தே மற்றும் வில்வித்தை வீரரான ஹுசைனி இறப்பு பலரை வேதனை படுத்தியது. அதேபோல் பாரதிராஜாவின் மகன் இறப்பும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இப்படி இருக்க நடிகரும் கராத்தே மற்றும் வில்வித்தை வீரரான ஹுசைனி, தனது மரணத்தை முன்பே கணித்தார் என்றே சொல்லலாம் அந்த வகையில், மரண படுக்கையில் அவர் இருந்த வேளையில் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் ""கேன்சர் என்பது ஒரு வரம். ஆனால் எனக்கு வந்து இருப்பது சாதாரண கேன்சர் அல்ல, 'ஏ பிளாஸ்டிக் அநேமியா' என்ற நோய் எனக்கு உள்ளது.

அதற்காக நான் பயப்படவில்லை வாழ்க்கையில் பயந்து கொண்டு இருப்பவன் தான் சாவுக்கு பயப்படுபவன், நான் 'கராத்தே மாஸ்டர்' எனக்கு வாழ்க்கையில் பயம் கிடையாது. ஆதலால் எனக்கு மரணத்தை கண்டு துளி கூட பயமில்லை. கண்டிப்பாக எனக்கு தெரியும் நான் இன்றைக்கு இருப்பேன்....நாளைக்கு இருக்கமாட்டேன் என்பது. காரணம் எனக்கு வந்திருப்பது சாதாரணமான கேன்சர் எல்லாம் கிடையாது . இதனை குணப்படுத்தவும் முடியாது".

இதையும் படிங்க: தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வடிவேலு...! விரட்டி அடித்த பாரதிராஜா...! வடிவேலுக்கு இப்படி ஒரு நிலைமையா...!

நான் உயிர் வாழ வேண்டுமானால் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த பொழுது எனது நண்பர் என்னை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றார் அந்த நொடியில் திரும்பி வருவேனா இல்லையா என தெரியாது என்பதால் நான் ஆசையாக வளர்க்கும் கிளியையும் நாயையும் கொஞ்சி விட்டு தான் வந்தேன்.

உங்களுக்கு தெரியுமா எனக்கு குடும்பம் குட்டி இல்லைதான் ஆனால் என்னை இன்று பார்த்து கொள்கிறவர்கள் யார் தெரியுமா? எனது மாணவர்கள் அனைவரும் ஒருநாள் நான் மறுநாள் நீ என சண்டை போட்டு என்னை பார்த்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிச்சையெடுத்து உயிர்வாழ எனக்கு விருப்பம் இல்லை ஆதலால் தான் நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. ஆதலால் கண்டிப்பாக நான் மரணிக்க போகிறேன் என எனக்கு தெரியும். எனவே நான் தயாராக இருக்கிறேன் என கூறி தனது உயிரை விட்டார் ஹுசைனி. 

காலையில் இவரது உயிர் உடலில் இருந்து பிரிந்து போக மாலையில் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜாவின் உயிரும் பிரிந்தது. மனோஜ் பாரதிராஜா மரணம் நிகழ்ந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அபாய கட்டத்தை தாண்டி மீண்டும் பழைய நிலைக்கு மாறி இருந்தார். இனி அவருக்கு எந்த பிரச்னையும் வராது என்ற நம்பிக்கையோடு அவருடைய குடும்பத்தினர் இருந்தனர்.

ஆனால் ஆப்ரேஷன் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து சில நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அப்போது கூட அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று மாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு வர மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவர்கள் வந்து பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

87 வயதான பாரதிராஜாவுக்கு 48 வயதான தனது மகன் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் மனோஜை பிடித்து அழுத காட்சிகளை இன்றும் மக்களால் மறக்க முடியாதவையாக உள்ளது. இப்படி இருக்க, தற்பொழுது தனது மகனை நினைத்து மிகவும் மனஉளைச்சலில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. இருப்பினும் தனது மகனை நினைத்து வேறொரு விஷயத்தில் அடிமையாகி இருக்கிறார் பாரதிராஜா என அவரது சகோதரர் ஜெயராஜ் கூறியுள்ளார். 

அதன்படி, தற்பொழுது மகன் இடத்தில் இருந்து தன்னை யார் பார்த்து கொள்வார்கள் என்ற ஏக்கத்தில் இருக்கும் பாரதிராஜாவுக்கு மனோஜின் இரண்டு மகள்களும் ஆறுதலாக மாறியுள்ளனர். குறிப்பாக அவர் சாப்பிடாமல் மகனை நினைத்து கொண்டு இருக்கும் பொழுது பேத்திகள் இருவரும் அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு ஆறுதல் படுத்தி வருகின்றனர்.

தங்களது அப்பாவின் நினைவை அவர் மனதில் இருந்து மறக்கடித்து தனது தாத்தாவை காப்பாற்ற பேரப்பிள்ளைகள் எடுத்து வரும் முயற்சியை பார்த்து அவர்களிடம் குழந்தையாகவே மாறி அவர்களுக்கு அடிமையாகி விட்டார் பாரதிராஜா என அவரது சகோதரர் வேதனையுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அம்பியாக இருந்த என்னை அந்நியனாக மாற்றியது பிக்பாஸ் வீடுதான்..! நடிகை ஸ்ருத்திகா கல கல பேச்சு..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share