ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
நடிகை வரலாட்சுமி நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இருப்பார். முக்கியமாக லண்டனை தளமாகக் கொண்ட ஒரு நடனக் கலைஞராக நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த வரலட்சுமி, நடிகையாக மாறுவதற்கு முன்பு மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து போடா போடி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது.
இதனை அடுத்து சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார், ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும் பாலாவின் "தாரை தப்பட்டை" படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!
பின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லையாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த நிலையில் அவரது உதவியாளரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க, இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் வரலட்சுமியை விசாரிக்க, அதிலிருந்து நிரபராதியாக மீண்டு வந்தார்.
இப்படி இருக்க, நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் "நிக்கோலாய் சச்தேவ்" என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் பலரால் பேசப்பட்டாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில், தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் வரலட்சுமி சமீபத்தில் தான் பாலியல் கிண்டலுக்கு ஆளானேன் என பேசியிருந்தார். அதில் "வரலட்சுமி, நான் சிறுவயதில் இருக்கும் பொழுது அம்மா அப்பாவிற்கு வேலைகள் அதிகமாக இருப்பதால் என்னை பலரது வீட்டில் விட்டு செல்வார்கள்.
அப்பொழுது பலரது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். உங்கள் கதை என் கதை கேமி" என்று கூறியதுடன் "உங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து 'குட் டெச் மற்றும் பேட் டெச்' சொல்லி கொடுங்கள்" என கூற, ஸ்னேகா அவரை கட்டி அனைத்து அழ தொடங்கினார்".
இந்த நிலையில், தேவராஜ் பரணிதரன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'ஷிவாங்கி லையோனஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 7ம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பெற்றது.
இந்த சூழ்நிலையில் இப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரிய வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அழகோ அழகு அவள் உடை அழகு..! பிரணிதா அழகில் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்..!