×
 

'முத்துகுளிக்க வாரீங்களா'...! தனது கணவரை மயக்க வித்தியாசமான ஆடையில் ரகுல் ப்ரீத் சிங்...! 

தனது கணவரை மயக்க முத்துக்களால் உருவான ஆடையை அணிந்து ரகுல் ப்ரீத் சிங் அசத்தியுள்ளார்.

பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து முடித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில்' ஸ்டிரிக்ட் ஆபிசர்கள் மத்தியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். 

பின் வடிவழகியாக அவதாரம் எடுத்த ரகுல் பல போட்டிகளில் கலந்து வெற்றிகளை குவித்து, அதன் பின், சினிமாவில் நடிக்க வந்தார். இப்படி தனது வாழ்க்கை முழுவதையும் ஸ்டிக்ட்டாக கழித்த ரகுல், ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பிறகு பல இடங்களுக்கு அவருடன் சென்று தனது வாழ்க்கையை இன்பமாக கழித்து வருகிறார்.

இதையும் படிங்க: "என்ன மக்களே இப்படி பண்ணுறீங்க.." துஷாரா விஜயன் போட்ட ஒற்றை பதிவு..! ரசிகர்கள் ஆரவாரம்..!

இதுவரை, மகிழ்திருமேனி இயக்கத்தில் 'தடையறத் தாக்க', ரவி தியாகராஜன் இயக்கத்தில் 'என்னமோ ஏதோ', ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் 'பிரம்மோற்சவம்', ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்', ஹச் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று'

ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் 'தேவ்', செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', ரவிக்குமார் ஆர் இயக்கத்தில் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

அதுமட்டுமல்லாமல், ரகுல் பிரித் சிங் தனது காதல் ஜோடியான ஜாக்கி பக்னானியை எங்கு அழைத்து சென்றாலும் கைகளை கோர்த்து கொண்டும், கட்டி அனைத்தபடியும், முத்தம் கொடுத்து அன்பை பகிர்வதும்,

நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பதும் என பிசியாக தனது வாழக்கையை கழித்து வருவதுடன் அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பல இளசுகளின் இதயத்தை  கொள்ளை கொண்டு வருகிறார். 

இப்படி தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வரும் ரகுல், அவ்வப்போது தனது ஜோடியுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலரது புகைச்சலுக்கு ஆளாகி வருவார். ஆனால் இன்று அவரது கணவருக்காக முத்துக்களால் உருவாக்கப்பட்ட உடையை அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

குறிப்பாக, ரகுல் பிரீத் சிங் நடித்த பல படங்களில் கார்த்தியுடன் நடித்த திரன் மற்றும் தேவ் போன்ற படங்களை யாராலும் மறக்க முடியாது. அதிலும்  "சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமையாகவா" என்ற பாடலில் காதலையும், வெட்கத்தையும், தனது ஜோடியுடன் அழகாக காண்பித்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமந்தா எக்ஸ் புருஷனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..! சாம்க்காக போர் கொடி தூக்கி அசத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share