துஷாரா விஜயனுடன் நடிக்க தயாராகும் ஆக்ஷன் ஹீரோ.. கதையை கேட்டு ஓகே சொன்ன துஷாரா..!
துஷாரா விஜயனுடன் நடிக்க தயாராக இருக்கிறார் ஆக்ஷன் நடிகர் ஒருவர்.
வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினியை கலங்க வைத்து, சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு மனைவியாக வந்து அவரை காதலில் புலம்ப வைத்து, வீர தீர சூரனாய் அவதாரம் எடுத்த நடிகர் விக்ரமுக்கு மனைவியாக உருவெடுத்து அவருக்கு வரும் எல்லாம் தீமைகளையும் உடைத்தெறிந்து கோவலனை காத்த கண்ணகியாய் நடிப்பில் அற்புதமான திறமையை வெளிக்காட்டி, நடிப்பின் பார்வையால் இயக்குனர்களையும், நடிப்பின் திறமையால் நடிகர்களையும், அழகின் உச்சத்தால் ரசிகர்களையும் கொள்ளை கொண்ட நடிகை தான் துஷாரா விஜயன்.
கண்களின் காந்த பார்வையும், பேச்சுக்களிலும் நடிப்புகளிலும் அழகின் மொத்த உருவமாக திகழும் நடிகை துஷாரா விஜயனை நம்பி, மிகப்பெரிய பிரமாண்டமான திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். ஆரம்பத்தில் துஷாராவின் புகைப்படத்தை பார்த்து அவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்த பா.ரஞ்சித், அவரது நடிப்பை பார்த்து முதலில் நம்பவில்லை என்றும் பின்பு படத்திற்காக அவர் வடசென்னை மக்களிடம் பழகிய விதங்கள், படத்திற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் பிடித்து போக "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தார் என கூறப்படுகிறது. அப்படி வேலை என்று வந்தால் ஒரு கை பார்த்து விடலாம் என களமிறங்கும் துஷாராவின் உழைப்பு அவரை முன்னுக்கு கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: "என்ன மக்களே இப்படி பண்ணுறீங்க.." துஷாரா விஜயன் போட்ட ஒற்றை பதிவு..! ரசிகர்கள் ஆரவாரம்..!
இப்படி தனது உழைப்பால் முன்னுக்கு வந்த துஷாரா தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு "பேஷன்" படிப்பை முடித்த பின்பு, படிப்படியாக திரையுலகில் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்தார், அதன்பின் நீண்ட நாட்கள் உழைப்பிற்கு பிறகு 2019ம் ஆண்டு "போதை ஏறி புத்தி மாறி", என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் நடித்தார்.
அடுத்ததாக, 2022-ல் "நட்சத்திரம் நகர்கிறது"என்ற திரைப்படத்திலும், பின் 2024-ல் தனுஷுக்கு தங்கையாக "ராயன்" திரைப்படத்திலும், 2024-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் "வேட்டையன்" திரைப்படத்திலும் தற்பொழுது விக்ரமின் நடிப்பில் உருவான "வீர தீர சூரன்" படத்திலும் நடித்து உள்ளார்.
இப்படி தனது உழைப்பால் உயர்ந்து உள்ள துஷாரா விஜயனுக்கு, 2023ம் ஆண்டு 'தமிழ் நட்சத்திர விருதுகளில் சிறந்த நடிகைக்கான நட்சத்திர விருது' கிடைத்தது. மேலும் ஓடிடி பிளே விருதுகள் 2022ல் 'வளர்ந்து வரும் ஓடிடி நட்சத்திர பெண்' என்ற சிறந்த விருதும் கிடைத்தது. அடுத்ததாக JFW சிறந்த அறிமுகவிமர்சகர் என்ற விருதுகளும், பின் 'கலாட்டா கிரவுண்ட் விருது' என பல விருதுகளை சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததற்காக பெற்றார்.
இந்த சூழலில், "வீர தீர சூரன்" திரைப்படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக பெருகியுள்ளது. அதற்கு நன்றி சொல்லும் விதமாக சமீபத்தில் அவரது இன்ஸ்டா பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் "வீர தீர சூரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. கலைவாணியின் பயணம் மிக ஸ்பெஷலானது. இந்த கதாபாத்திரம் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும்.
இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விக்ரமுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம். ஜி.வி.பிரகாஷின் இசை கலைவாணிக்கு மேஜிக்கலாக உயிர்கொடுத்துள்ளது. எஸ்.ஜே . சூர்யா மற்றும் சுராஜ் உடன் நடித்தது மிகவும் பெருமை" என நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துஷாரா நடிக்கப்போகும் படம் குறித்ததான அதிரடி அப்டேட் கிடைத்து உள்ளது. அதன்படி, நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாக தயாராக இருக்கும் "ரவி அரசு" படத்தில் விஷாலுடன் நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தம் செய்து இருக்கிறார். சட்டப்படி துஷார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 எப்படி இருக்கு தெரியுமா..? நடிகர் யோகிபாபு கொடுத்த ஸ்வீட் அப்டேட்..!