ஜெயிலர் 2 எப்படி இருக்கு தெரியுமா..? நடிகர் யோகிபாபு கொடுத்த ஸ்வீட் அப்டேட்..!
ஜெயிலர் 2 திரைப்படத்தை குறித்து சூசகமாக அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் யோகிபாபு.
படங்கள் எத்தனை வேண்டுமானாலும் வரலாம். அதில் கதாநாயகன் கதாநாயகியை காதலிப்பார், பின்பு வில்லன்களை அடித்து துவம்சம் செய்து ஓட விடுவார், இறுதியில் அனைவரையும் ஒன்று சேர்ப்பார். இதற்காக படம் பார்க்கும் ரசிகர்களின் கரகோஷங்களை பெறுவார். ஆனால் படத்தில் கதாநாயகன் தொடர்ந்து சண்டை போடும் காட்சிகளையும் காதல் செய்து கொண்டிருப்பதையும் மக்களால் நீண்ட நேரத்திற்கு பார்க்க முடியாது. அதற்கு படத்தின் முக்கிய நேரங்களில் காமெடி மற்றும் நடனம் போன்ற கலவையை சேர்த்தால் தான் படம் அபார வெற்றி பெரும்.
அப்படி கதாநாயகர்களை மட்டும் பிடிக்கும் ரசிகர்கள் வரிசையில் காமெடி நடிகர்களை மனதார நேசிக்கும் ரசிகர்களும் உண்டு. அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து தமிழ் காமெடி நடிகர்களாக பார்க்கப்படும் நாகேஷ், செந்தில், கவுண்டமணி, கோவைசரளா, மனோரம்மா, வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு, ரெனின் கிங்ஸ்லி என பல காமெடி நடிகர்கள் இன்றும் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பஹத் பாசில் - வடிவேலு மிரட்டும் 'மாரீசன்' ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு!
அவர்கள் வரிசையில் இன்றும் "பாரதியார் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா" என ஆரம்பித்து "ஓடி விளையாடி பாப்பா கூட வந்த குழந்தையை விட்டுட்டு போகாத பாப்பா" என சொல்லியிருக்காரா இல்லையா என ரஜினிக்கே தக் லைஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து, இன்று மக்கள் மனதில் வேரூன்றி நிற்பவர் தான் காமெடி நடிகர் யோகிபாபு. இவரது ஸ்பெஷலே இவரது டைமிங் காமெடி மற்றும் அவரது அபார கவுண்டர் போடும் திறமை தான். அதனால் தான் இன்று யோகிபாபு காமெடி நடிகராக நடித்து, தற்பொழுது படத்தின் கதாநாயகனாக உருவெடுத்து இருக்கிறார்.
அப்படிப்பட்ட யோகி பாபு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "லொள்ளு சாப" நிகழ்ச்சியில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார், பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் "யோகி" என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். எப்படி நடிகைகளுக்கு பெயரை மாற்றி அவர்களை பிரபலப்படுத்துவார்களோ அதேபோல் இப்படத்திற்கு பின்னர் பாபு என்ற இவரது பெயரை "யோகி பாபு" என தமிழ் திரைத்துறையில் மாற்றினர்.
யோகிபாபு என பெயர் மாற்றத்திற்கு பின்னர் இவருக்கு பல போராட்டங்கள் இருந்தாலும் அதன் மத்தியில் பல பட வாய்ப்புகளும் மெல்ல.. மெல்ல வர ஆரம்பித்தது. அதன்படி, யோகி படத்திற்கு பின்னர் "பையா" திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் "கலகலப்பு" திரைப்படத்தில் "பிம்ப்" எனும் கதாபாத்திரத்திலும், "வேலாயுதம்" திரைப்படத்தில் கிராமத்து வாசியாகவும், தினேஷின் அட்டகத்தி, விஜய் சேதுபதியின் "சூது கவ்வும்",அருண் விஜயின் "பட்டத்து யானை" போன்ற பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு ஜேக்பார்ட்டாக அமைந்தது 2014 ஆம் ஆண்டு வெளியான "மான் கராத்தே" திரைப்படம். இப்படத்தில் "வௌவால்" என்ற பெயரில் ரிங்கில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இறங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இப்படத்திற்கு பிறகு, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை, நாலு போலீஸும் நல்ல இருந்த ஊரும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ஆண்டவன் கட்டளை, ரெமோ, கோலமாவு கோகிலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்த்தியது. பின்பு கதாநாயகனாக களமிறங்கிய யோகிபாபு "தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா,லக்கி மேன், இரும்பன்" முதலிய படங்களில் நடித்து உள்ளார்.
அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்த யோகிபாபு, தற்பொழுது அவர் கைவசம் அஜித்தின் குட் பேட் அக்லி, மெடிக்கல் மிராக்கல், ராஜா சாப் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. இந்த சூழலில், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட யோகி பாபு, அவருடைய ஒவ்வொரு படம் முடிவுக்கு பின்பும் பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவதை நம்மால் காண முடியும். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் யோகிபாபு '' நான் நடிக்கும் படங்களுக்கு என்றும் கடவுள் துணையாக நின்று வெற்றிகளை கொடுப்பார்.
அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது ஜெயிலர் 2-ம் பாகத்திலும் அவருடன் நடித்து வருகிறேன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் அருமையாகவும் அதிரடியாகவும் உருவாகி வருகிறது. குறிப்பாக அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையிலும் நெல்சன் வைத்து இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் கூலி படத்திற்காகவும் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திற்காகவும் நாங்கள் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கிறோம் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்னா கழட்டி வீசிய தாலியை... வீரா கழுத்தில் கட்ட முடிவு செய்த வெங்கடேஷ்! பரபரப்பான தருணத்துடன் 'அண்ணா' சீரியல் அப்டேட்!