×
 

வெளிநாட்டில் துப்பாக்கி முனையில் துல்கர் சல்மான்..! கஷ்டப்பட்டு காப்பாற்ற முயன்ற இயக்குனர் கதி..!

துல்கர் சல்மான் படப்பிடிப்பின் பொழுது துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய திரையுலகில் இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் நடிகர் 'மம்முட்டி' என்கின்ற 'முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்'. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  

இப்படி இருக்க, திரையுலகில் இவரது ஆரம்ப வாழ்க்கை 1971ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற படத்தின் மூலம் தொடங்கியது. அதன் பின், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகருக்கு மேளா, வில்லனுண்டு ஸ்வப்னங்கள் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், 80களில் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்து, 90களில் பூதக்கண்ணடி, டாக்டர்.பாபாசாஹத் அம்பேத்கர், பொந்தன் மட மற்றும் விதேயன் போன்ற மலையாள படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார்.

இதனை அடுத்து, 1990ம் ஆண்டு, கே.மது இயக்கிய "மௌனம் சம்மதம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்", இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "தளபதி", இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் "கிளிப்பேச்சு கேக்கவா", என்.லிங்குசாமி இயக்கத்தில் "ஆனந்தம்" மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின் தெலுங்கில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு "சுவாதி கிரணத்தில்" நடித்தார். 

இதையும் படிங்க: ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..!

இப்படி மலையாள நடிகராக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் நடிப்பில் பின்னி பெடல் எடுப்பவர் நடிகர் மம்முட்டி. புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? என்பதை போல இவரது மகன் 'துல்கர் சல்மான்' படம் என்றால் இன்றும் திரையுலகில் அசத்தல் தான். இப்படி பட்டவர்  2012ம் ஆண்டு "செக்கண்டு சோவ்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இதுவரை தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் "வாயை மூடி பேசவும்", மணிரத்னம் இயக்கத்தில் ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி), பிஜோய் நம்பியார் இயக்கத்தில் சோலோ, நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் திலகம், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் குரூப், ஹனு ராகவபுடி இயக்கத்தில் சீதா ராமம், பிருந்தா இயக்கத்தில் ஹே சினாமிகா, ரா கார்த்திக் இயக்கத்தில் வான், நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். 

இதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் வெளியான "லக்கி பாஸ்கர்" திரைப்படம் அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாக இருந்து உள்ளது. அது மட்டுமல்லாமல் ஹர்ஷா மகராவை பற்றியும் அவரது சிந்தனை பற்றியும், அவர் பணம் சம்பாதித்த விதங்களைப் பற்றியும், அவரைப் போல் பணம் சம்பாதிக்க நினைத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கும்.

கடைசியில் பிரச்சினையில் சிக்கும் போது அதிலிருந்து வெளியே வர பொறுமையுடன் சிந்தித்து, எந்த மாதிரியான சூழ்நிலைகளை கையாள வேண்டும் என்பதையும் இப்படம் மூலம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆதலால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "ஏ.பி.சி.டி (அமெரிக்கன் பான் கன்பியூஸ்டு டெசி) படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சுவாரஸ்ய சம்பவம் குறித்து அப்படத்தில் பணியாற்றிய நடிகரும், கதாசிரியருமான "தம்பி ஆண்டனி" என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் " ஏ.பி.சி.டி படத்திற்காக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள குறிப்பிட்ட ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை.  

சொன்ன நேரங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர், திடீரென வீட்டிற்குள் நுழைந்து படக்குழுவினர் அனைவரையும் வெளியேறுங்கள் என கூறி, கெட்ட வார்த்தையால் திட்ட ஆரம்பித்துவிட்டார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் நாங்கள் திகைத்து நிற்க, வீட்டின் கீழ் தளத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து வந்து, பட குழுவினரை மிரட்ட ஆரம்பித்து விட்டார்.

இப்படிப்பட்ட சூழலில், கீழே நடப்பது என்னவென்றே தெரியாமல் ஒரு அறையில், இப்படத்தின் அடுத்த காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த நடிகர் துல்கர் சல்மானை நோக்கி துப்பாக்கியுடன் வந்த வீட்டு ஓனரை பார்த்ததும், யார் நீங்கள் உங்களுக்கு இங்கே என்ன வேலை? என்று துல்கர் சல்மான் கூலாக கேட்க, உடனே இங்கு இருந்து வெளியே போ...என்று வீட்டு உரிமையாளர் கத்தினார். அதற்கு துல்கர் “நான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறேன்.. படப்பிடிப்பை முடிக்காமல் என்னால் வெளியேற முடியாது, எனவே நீங்கள் படப்பிடிப்புக்கு இடையூறாக இல்லாமல் வெளியேறுங்கள்” என்று கூறினார்.

இதனால் மீண்டும் கடுப்பான வீட்டு உரிமையாளர் “நீ யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. கெட் அவுட் ” என கத்தி கூச்சலிட ஆரம்பித்தார். இதனால் பயந்து போன இயக்குனர் 'மார்ட்டின் பரக்கத்' மற்றும் ஒளிப்பதிவாளர் 'ஜோமோன் டி ஜான்' ஆகிய இருவரும் முதலில் துல்கர் சல்மானை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு ஒரு வழியாக அந்த வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தி மீதி படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி வந்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share