ஏப்ரலில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்...! ஹிட் கொடுக்கும் படங்களால் பிசியாக தயாராகும் ரசிகர்கள்..!
ஏப்ரல் மாதம் வெளியாகும் ஹிட் படங்கள் வரிசைப்படுத்தப்பட்ட லிஸ்டுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு வெளியான படங்களின் வரிசையில் டிராகன், நீக், எல்2 எம்பூரான், வீரதீர சூரன், குடும்பஸ்தன், சிக்கந்தர் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி பின் ஓடிடியிலும் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது இன்னும் நடிகர் விஜயின் ஜனநாயகன், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி, சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் மதராஸி போன்ற படங்கள் வெளியாக தயாராக உள்ளது.
மேலும், சமீப காலமாக ஓடிடியிலும் திரையரங்குகளிலும் பல படங்கள் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த சூழலில் 90ஸ்களின் கனவு திரைப்படங்களான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கில்லி, பகவதி, பாபா, சுந்திரா டிராவல்ஸ் என பல படங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரீமேக் செய்து வெளியிட்டனர். இப்படங்கள் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது பழைய படங்களான ஆட்டோகிராஃப் படங்களை ஏஐ அனிமேஷன் தொழிநுட்பத்தின் உதவியுடன் உருவாகி கொண்டு இருக்கிறது. தற்பொழுது ஹீரோ ஹீரோயின்கள் இல்லாமல் ஏஐ முறைப்படி அனிமேஷன் படங்களும் உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: படக்குழுவுக்கு அஜீத் போட்ட அதிரடி ரூல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்த நிலையில், மாதம் தவறாமல் திரையரங்குகளில் 4 முதல் ஐந்து படங்கள் வெளியாகும். அந்தவகையில் மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்தமாதம் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அதன்படி முதலாவது படம் 'டெஸ்ட்'- எஸ். சஷிகாந்த் இயக்கத்தில் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர், படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தை குறித்து நடிகர் சித்தார்த் பேசுகையில், "'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான்" என கூறினார். இதனை அடுத்து இந்த படத்தை காண மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
அதே போல் இரண்டாவதாக வெளியாக உள்ள திரைப்படம் "குட் பேட் அக்லி". நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் முன்பதிவு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 08.02 மணிக்கு தொடங்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக வெளியாக உள்ள திரைப்படம் வடிவேலு மற்றும் சுந்தர் சியின் கலக்கல் கூட்டணியில் உருவாகி இருக்கும் "கேங்கர்ஸ்" திரைப்படம். சுமார் 15 வருடங்களுக்கு பின் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணையும் இப்படம் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் வடிவேலு, பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, மைம் கோபி, முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், இளவரசு, சிங்கம்புலி, அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 24ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இம்மாதம் முழுவதும் ரசிகர்களை பிசியாக வைத்துக்கொள்ளும் அளவிற்கு படங்கள் வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக சினிமா வட்டாரங்கள் முதல் ரசிகர் வட்டாரம் வரை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேரு வச்சதே அஜித்தான்... வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!!