கார் ரேஸில் முன்னிலையில் இருக்கும் அஜித்..! விறுவிறுப்பாக நடிப்பெற்று வரும் கார் பந்தயம்..!
நடிகர் அஜித் பங்கேற்றுள்ள கார் பந்தயத்தின் நேரலையை பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
நடிகர் அஜித் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேசுகளிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படி இருக்க, பைக் ரெய்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தும் நடிகர் அஜித்தை பிடிப்பது என்பது அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. இப்படி இருக்க, பல முயற்சிகளுக்கு பின் வெளியே வந்த திரைப்படம் தான் "விடாமுயற்சி" திரையரங்குகளில் வெளியான இப்படம் சரியாக ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை எனவும் கூறிய லைக்கா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் இத்திரைப்படத்தினால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்பொழுது "குட் பேட் அக்லி" திரைப்படம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிரியா வாரியருக்கு போட்டியாக இறங்கிய நடிகர் பிரசன்னா..! அஜித்தை பாராட்ட இணையதளத்தில் போட்டி போடும் பிரபலங்கள்..!
இந்த சூழலில், நடிகர் அஜித்குமார், சமீபத்தில் தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில், துபாய் கார் பந்தயத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் நடிகர் அஜித் கலந்து கொண்டு, ரேசில் தனது முழு முயற்சியையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது ஜி.டி.யே காரில் அஜித் கலத்தில் விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் தற்பொழுது பங்கேற்றுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் இந்த பந்தயத்தின் வெற்றி முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய சிக்கலில் அஜித்தின் "குட் பேட் அக்லி"..! முதல் காட்சி கிடையாது.. படக்குழுவினர் அந்தர்பல்டி..!