×
 

புதிய சிக்கலில் அஜித்தின் "குட் பேட் அக்லி"..! முதல் காட்சி கிடையாது.. படக்குழுவினர் அந்தர்பல்டி..!

ரசிகர்களுக்கு ஹாக் கொடுக்கும் வகையில் அஜித்தின் குட் பேட் அக்லிபடத்தின் முதல் காட்சியை ரத்து செய்துள்ளனர் படக்குழுவினர்.

சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு இல்லை எனவும் இப்படத்தால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

அஜித்தின் நடிப்பில் மிகவும் ஜாலியான திரைப்படம் என்றால் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த "மங்காத்தா". அதில் "money money money" என பணத்தை குறித்து அவர் கூறும் வார்த்தை, தனி பாஷையாகவே மாறியுள்ளது. இப்படி இருக்க மங்காத்தாவின் தொடர்கதையாக உருவாகி உள்ளது நடிகர் அஜித்தின் புதிய திரைப்படம். 

இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த "குட் பேட் அக்லி"...! வசூல் வேட்டையிலும் சாதனை..!

இதனை தொடர்ந்து, விட்ட வசூலை மீண்டும் பிடிக்கவும் ரசிகர்களுக்கு பிடித்த படத்தை கொடுக்கவும் மீண்டும் வந்திருக்கிறது மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு முதலானோர் நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". விடாமுயற்சியை விட இப்படம் மிகவும் அருமையாகவும் மாசாகவும் இருக்கும் என ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த சூழலில் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் முன்பதிவானது ஏப்ரல் 4ம் தேதி இரவு "08.02" மணிக்கு தொடங்கியது. அதன்படி, இதுவரை குட் பேட் அக்லி, ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் வசூல் மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இப்படத்தின் பிரி புக்கிங்கில் வசூல் வேட்டையை கணிக்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் தரமான மாஸான "ட்ரைலர்" ஏப்ரல் 4ம் தேதி இரவு  "09:01"க்கு வெளியானது. அதில் ஒத்த ரூபாய் தாரேன் பாடலை ரீ மிக்ஸ் செய்து அமர்க்களமாக ஆரம்பிக்க, அஜித் கேங்ஸ்டர் அவதாரம் எடுத்திருந்தார். இந்த படத்தின் டிரைலர் பயங்கரமாக இருக்க, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.1900த்திற்கும், தனி திரையரங்குகளில் முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.500க்கும் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்க பட்டுள்ளதாம்.

குறிப்பாக, ரூ.500க்கு டிக்கெட்களை விற்கவில்லை என்றால் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் முதல் காட்சி இல்லை, 12 மணிக்கு தான் காட்சியை தொடங்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் செக் வைத்துள்ளனர். 

இதனால், குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி என்ன ஆகுமோ என கவலையில் உள்ளனர் அஜித்தின் ரசிகர்கள்.  
 

இதையும் படிங்க: ஒரே நாளில் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்கும் "AK"..! இன்று வெளியாகிறது "GBU" பட ட்ரைலர்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share