குடியரசு தலைவர் கையால் அஜித்துக்கு விருது..! குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட "AK"..!
நடிகர் அஜித் தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை பெற தனது குடும்பத்துடன் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன
படம் வெற்றி அடைந்தால் பெரிதான ஆட்டமும் இல்லை, படம் தோல்வி அடைந்தால் அதற்காக வருத்தப்படுவதும் இல்லை. இப்படி பட்ட சிறந்த குணமுடையவர் தான் நடிகர் அஜித். பார்க்க கலராக ராயல் லுக்கில் இருந்தாலும் குணத்தில் எளிமை உள்ளவர் தான். இவரது படங்களில் எப்படி அட்டகாசமான கேங்ஸ்டராக வருகிறாரோ அதேபோல் தவறு என்று தெரிந்தால் தலையே போனாலும் அதற்கு இசைந்து கொடுக்காதவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு முன்பு, தன் பெயரில் இருந்த ரசிகர் மன்றத்தை முற்றிலுமாக கலைத்த நடிகர் அஜித், முதலாவது நன்றாக படியுங்கள், உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள் என சொல்லி தனது ரசிகர்கள் நலனில் மிகவும் கவனம் உடைய ஹீரோவாக இன்றும் நம் மத்தியில் உலா வந்துகொண்டு இருக்கிறார். மேலும், தன்னை இனி யாரும் "தல" என அழைக்கவேண்டாம் என கூறி பலரது பாராட்டுகளை பெற்றவர்.
இப்படிப்பட்ட நடிகர் அஜித் பல போராட்டங்களை கடந்து தான் திரையுலகில் இன்று யாரும் அசைக்க முடியாத ஆலமரமாக நின்று கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: மனைவிமார்களுடன் நடுவில் மாற்றி நின்ற அஜித்- சிவா... ஆபாசப்படுத்திய திமுக பேச்சாளர்..!
இத்தனை படங்களில் நடித்த அஜித்துக்கு உண்மையில் ஆர்வம் அதிகம் உள்ளது எதில் என பார்த்தால் ரைடு செய்து உலகத்தை சுற்றுவது தான். தனது படங்களை முடித்து விட்டு உடனே தனது பி.எம்.டபிள்யு பைக்கை எடுத்து கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாக சீட்டாட்டம் பறந்து விடுவார் நடிகர் அஜித். இப்படி பைக்குகளில் மட்டுமே நாடுகளை கடந்து சென்ற அஜித் தற்பொழுது உலக நாடுகள் பார்க்கும் வண்ணம் நாடு கடந்து கார் ரேஸில் கலந்து இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
அந்த வகையில், சமீப காலமாக, கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித் ரேஸிற்கு மீண்டும் தயாராகும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, தற்பொழுது இந்த ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறார். இதுவரை இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற அஜித்தின் அணி தற்பொழுது வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று உள்ளது.
இப்படி இருக்க, இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் விருது வாங்க இருக்கிறார் நடிகர் அஜித். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சமீபகாலமாக எங்கு சென்றாலும் தனது குடும்பத்துடன் அதிகமாக காணப்படும் நடிகர் அஜித், இந்த முறை, தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெற தனது குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நடிகர் அஜித்தை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊருக்கே 'தல'ன்னாலும் மனைவிக்கு புருஷன் தானே..! ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்..!