×
 

மனைவிமார்களுடன் நடுவில் மாற்றி நின்ற அஜித்- சிவா... ஆபாசப்படுத்திய திமுக பேச்சாளர்..!

அஜித் அருகே சிவாவின் மனைவியும், ஷாலினி அருகே சிவகார்த்திகேயனும் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ள ஆபாசப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி...

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி... திமுகவின் ஆபாச மேடைப் பேச்சாளர். பலமுறை தனது சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பொது வெளியில் விமர்சனங்களை எதிர்கொண்டவர். அவரது பேச்சுகள், குறிப்பாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், பெண் தலைவர்களை இலக்காகக் கொண்டு ஆபாசமாகவோ, தரக்குறைவாகவோ பேசி தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருபவர். இப்போது சினிமா நட்சத்திரங்களான அஜித் குமார்- சிவகார்த்திகேயன் அவர்களது மனைவிகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து அவர்களது உறவை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துப் பகிர்ந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

 

2023 ஜூன் மாதம் சென்னை கொடுங்கையூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு குறித்து தகாத மற்றும் ஆபாச வார்த்தைகளில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊருக்கே 'தல'ன்னாலும் மனைவிக்கு புருஷன் தானே..! ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்..!

இதையடுத்து, குஷ்பு உணர்ச்சிவசப்பட்டு செய்தியாளர்களிடம் பேசி, இதுபோன்ற பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுநர் மாளிகை மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிவாஜி மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதனால், கொடுங்கையூர் காவல்துறையினர் அவரை கைது செய்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்

.

திமுக தலைமை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. பின்னர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தி ஜாமீன் வழங்கினார்.

2024 பிப்ரவரியில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சியில் பணியாற்ற அனுமதி கோரினார். இதை ஏற்று, திமுக தலைமை அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் கட்சியில் சேர்த்தது. இது மக்களவைத் தேர்தல் நெருங்கிய நேரத்தில் நடந்ததால், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

2024-ல் காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராதிகா சரத்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி மீது புகார் அளித்தார், மேலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு குஷ்பு மற்றும் ராதிகா ஆகியோர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

2024 ஜூனில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. இதை அடுத்து, குஷ்பு, சிவாஜி மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி, அவருக்கு மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

2025 மார்ச்சில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கூட்டத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்களை “எச்சை சோறு” என்று கீழ்த்தரமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்றது. இதற்கு பல அரசியல் தரப்பினர், குறிப்பாக எதிர்க்கட்சியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2024 டிசம்பரில், நடிகர் விஜய், அவரது குடும்பத்தினர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுகள் திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கருதப்பட்டாலும், அவர் மன்னிப்பு கேட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், அவரது தொடர்ச்சியான சர்ச்சைகளால், கட்சியின் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், அவரது பேச்சுகள் திமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கலாம் என்று கருதுகின்றனர்.

எக்ஸ் தளத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுகளை ஆபாசமானவை, கொச்சையானவை என்று விமர்சித்து பல பதிவுகள் வெளியாகியுள்ளன. அவரை மேடையில் பேச அனுமதிப்பது திமுகவின் தவறு என்று சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சர்ச்சைகள், அவரது ஆபாச மற்றும் தரக்குறைவான பேச்சுகளால் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளன. இதுவரை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாகவே இருந்து, பின்னர் அவர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது பேச்சுகள் திமுகவிற்கு நீண்டகால அரசியல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் கார் ரேஸை முடித்துக் கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். அவர் நேற்று மனைவி ஷாலியுடன் 25வது திருமண நாளைக் கொண்டாடிய நிலையில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு மனைவியுடன் வந்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனும் அவரது மனைவியுடன் வந்திருந்தார். இரு தம்பதிகளும் அருகருகே அமர்ந்து போட்டியை ரசித்தனர்.

 

பின்னர் அஜித் அருகே சிவாவின் மனைவியும், ஷாலினி அருகே சிவகார்த்திகேயனும் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ள ஆபாசப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, '' நல்ல குடும்பம்... நல்ல மனிதர்கள்..'' என அவர்களது உறவுகளை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இரட்டை அர்த்தம் பொதியும் வாசகத்துடன் பகிர்ந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நல்ல குடும்பம் நல்ல மனிதர்கள்❤️#AK #SK pic.twitter.com/Om2kvL2vrQ

— Sivaji Krishnamurthy (@Sivajikm_offl1) April 25, 2025

 

அவரது உள்நோக்கக் கமெண்டை பார்த்து பலரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கிழித்தெடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share