"படம் பிளாக்பஸ்டர் தான் ஆனால் தலையில் ஏத்திக்காத"..! அஜித் கொடுத்த நச் அட்வைஸ்..!
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படத்த்தின் இயக்குனரிடம் அஜித் கூறிய வாழ்த்து செய்தி வித்தியாசமாக உள்ளது.
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அவர் தான் நடிகர் அஜித் குமார். பல நடிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் இவர் மட்டும் பைக் ரைடு செய்தார், வெளிநாடுகளை சுற்றி பார்த்தார், மாணவர்களுக்கு ஆசிரியராக மாறினார், கார் ரேஸில் வெற்றி பெற்றார் என இப்படிப்பட்ட செய்திகளிலேயே அதிகம் சிக்குவார்.
பெரிதாக எந்தவித விருது நிகழ்சிகளுக்கும் செல்வதில்லை, படம் வெற்றியடைந்தால் ஆட்டமும் இல்லை, அதிகமான பேச்சும் இல்லை ஆனால் இன்றும் ரசிகர்கள் மத்தில் "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் அவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார் நடிகர் அஜித்.
இப்படிப்பட்டவர், இதுவரைக்கும் தமிழில் மட்டுமே படங்களை நடித்து உள்ளார். ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிசார்ந்த ரசிகர்களுக்காக இவரது படம் டப்பிங்கில் இன்றுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வளர்ந்த நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது.
இதையும் படிங்க: அஜித்துக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்..! மனம் வருந்தி பேசிய நஸ்லேன்..!
இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர்.
இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இப்படி பல படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தாலும் அவர் யாருக்கும் தெரியாமல் செய்யும் உதவிகளாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். உதாரணமாக 2014-ம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்யும் 12 பேருக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும், 2018-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன் விமானம் ஒன்றினை உருவாக்கி அசத்தினார். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் குழு ஒன்றை அமைத்து உதவி செய்தார்.
இப்படிப்பட்ட அற்புதமான மனிதரின் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகிறது. இப்படி இருக்க, படத்தின் வெற்றியை படக்குழுவினர் முதல் அஜித் ரசிகர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அஜித்தை குறித்து அவருடன் நடித்த பிரியா வாரியார், பிரசன்னா, கார்த்திகேயா தேவ், மற்றும் அர்ஜுன் தாஸ் முதலானோர் கூறிவரும் நிலையில் தற்பொழுது இப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தை பற்றி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதில், படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்திடம் பேசுகையில், அவர், ஓகே படம் ஹிட் ஆகி விட்டது, படம் ப்ளாக்பஸ்டர். படத்தின் வெற்றியை மறந்து விடு. இந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம். அதே போல் தோல்வியை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம். அடுத்து என்ன என்று நிதானித்து அறிந்து பணிபுரிய தொடங்குங்கள்” என்று ஏகே தெரிவித்தார் என கூறினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
மீண்டும் அஜித் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக வரும் செய்திகள் குறித்து பேசிய அவர், “இந்த படத்தின் வெற்றியை தற்பொழுது அனுபவித்து வருகிறேன். இந்த சூழலில் அஜித் சார் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கினால், இதே குழுவினருடன் இன்னும் சந்தோஷமாக பணிபுரிவேன்” என்றும் தெரிவித்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக மீண்டும் இதே கூட்டணி அமையும் உங்கள் படமும் அமோக வெற்றி பெரும் என ஆசிர்வாதம் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மங்காத்தா 2 குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..! பயங்கர குஷியில் அஜித் ரசிகர்கள்..!