மங்காத்தா 2 குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..! பயங்கர குஷியில் அஜித் ரசிகர்கள்..!
மங்காத்தா 2 திரைப்படத்தை இயக்குவதை குறித்து தெளிவாக பேசியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
தமிழ் திரையுலகில் கிரிக்கெட்டை சார்ந்து இன்று லப்பர் பந்து, டெஸ்ட், தோனி, கனா என பல படங்கள் வந்தாலும் இத்தனை படங்களையும் விட அனைவருக்கும் பிடித்த நம்பகமான நகைச்சுவையான கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படம் என்றால் அதுதான் "சென்னை 600028". இந்த படத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இன்று நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் "குட் பேட் அக்லி" படத்தை விட அவரது ரசிகர்கள் பெரிதும் நேசிக்க வைத்த மறக்க முடியாத படம் என்றால் "மங்காத்தா". இந்த இரண்டு படங்களுக்கும் சொந்த காரர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு.
இவரது இயக்கத்தில் படம் வருகிறது என்றாலே மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாகவே அமையும். காரணம், அந்த அளவிற்கு படம் காமெடியாகவும், நட்பு ரீதியாகவும், காதல் வாழ்க்கையையும் வைத்து அழகாக செதுக்கி இருப்பார். அதுமட்டுமல்லாமல், இவரது படைப்பில் சமீபத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக அவரையே வைத்து, படத்தின் ஆரம்பத்தில் கேப்டன் விஜயகாந்தை காண்பித்து படத்தை அசத்தி இருந்தார். ஆனால் அந்த படத்தை விட எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிட "மாநாடு" படத்தில் "வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு" என்ற டயலாக் மிகவும் ட்ரெண்டானது.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள்..! வெளுத்து வாங்கிய AK ரசிகர்கள்..! குளிர் காய்ந்த ப்ளூ சட்டை..!
மேலும், நடிகர் கார்த்திக்-கை வைத்து இவர் இயக்கிய "பிரியாணி" திரைப்படமும் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் "திரும்பி வா உன்திசை எது மாறி போகாதே" என்ற ஊக்கமளிக்கும் பாடலை அனைத்து இசையமைப்பாளர்களையும் வைத்து பாட செய்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார். அதேபோல், இவரது இயக்கத்தில் வெளியான "கோவா" திரைப்படத்தில் பிரேம்ஜி அழகான சாமியார் கெட்டப்பில் வந்து வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது.
கோவாவுக்கு பயணம் செய்யும் நண்பர்களில் நடிகர் ஜெய்க்கு அங்குள்ள பெண்ணின் மீது காதல் ஏற்பட "இதுவரை இல்லாத உணர்விது"என பாடி பல இளசுகளின் மனதை ஏங்க வைத்தார். அதன் பின், "வாழ்க்கையை யோசிங்கடா தலையெழுத்தை நல்லா மாத்துங்கடா" என்ற பாடலும் இதுவரை யாராலும் மறக்க முடியாது.
இப்படி இவர் படைப்பில் உருவான அனைத்து படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட வெங்கட் பிரபு வாழ்க்கை என பார்த்தால், நம் அனைவருக்கும் தெரிந்த, இசை-இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான கங்கை அமரனின் மகன் மற்றும் நடிகர், பாடகர் மற்றும் இசை இயக்குநரான 'பிரேம்ஜி அமரனின்' மூத்த சகோதரரும் ஆவார். மேலும், அவரது பெரியப்பா இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது உறவினர்கள் என்று பார்த்தால் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பாடகர் பவதாரிணி.
இத்தனை பெருமைகளுக்கும் சொந்த காரரான வெங்கட் பிரபு, மீண்டும் எப்பொழுது நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுப்பார் என பல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதற்குண்டான பதிலை சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் தெரிவித்து இருக்கிறார் வெங்கட் பிரபு. இதனை குறித்து அவர் பேசுகையில், "'மங்காத்தா 2' படம் குறித்து தெரியவில்லை.
ஆனால், அப்படத்தின் மீது அனைவருக்கும் ஆசை இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரியும். அதன் 2-ம் பாகம் பண்ணலாமா அல்லது வேறு படம் பண்ணலாமா என எனக்கு சரியாக தெரியவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, வேறு எந்தப் படமும் ஓடாத போது அஜித் சார் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார் என்றார். அதே போல்தான் நானும் 'சென்னை 600028', 'சரோஜா' மற்றும் 'கோவா' என 3 படங்கள் பசங்களை வைத்துதான் இயக்கியிருந்தேன்.அந்த சமயத்தில் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தது அஜித் சார் தான்.
அதுமட்டுமல்லாமல், என்னை நம்பிய முதல் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என்றால் அது தல, ஏ.கே மட்டும் தான். என்னை நம்பிய முதல் ஹீரோ அவர். அவர் எப்படி தேர்ந்தெடுப்பார் என்பது எல்லாம் தெரியாது. 'சென்னை 28' முடிந்த பின்பே என்னை 2-3 தயாரிப்பாளர்களிடம் அனுப்பினார்கள். ஆனால், ஏதோ காரணங்களால் அது நடக்கவில்லை. எல்லாரும் போல நானும் வெயிட்டிங்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அஜித்தை வைத்து படம் பண்ணுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கார் ரேஸில் முன்னிலையில் இருக்கும் அஜித்..! விறுவிறுப்பாக நடிப்பெற்று வரும் கார் பந்தயம்..!