வெளிநாடுகளிலும் ஹிட் அடித்த குட் பேட் அக்லி..! வசூலில் கோடிகளை அள்ளும் 'AK' படம்..!
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வசூல் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகினறனர்.
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் பழைய பாடல்களை வைத்து நடனம் ஆடுவது சண்டைபோடுவது போன்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருப்பார் அர்ஜுன் தாஸ். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா குரலில் "உங்களுடன் நூறு வருடம் வாழனும்" என போனில் ஒருவர் பேச, அது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் வந்த தனது மனைவியின் குரல் என்பதை உணர்ந்த அஜித், "எந்த மனைவி டா கட்டின புருஷனுடன் நூறு வருடம் வாழனும் என சொல்லுவார்" என சொல்ல, தியேட்டரில் விசில் பறந்தது. இறுதியில் படத்தில் சண்டை காட்சிகளில் "ஆளுமா டோலுமா" பாடலை வைத்து சண்டையிடுவது அமோகமாக இருந்தது.
இதையும் படிங்க: அஜித் என்மேல் வைத்த நம்பிக்கை..! அவரால் தான் நான் இன்று ஹீரோ.. அர்ஜுன் தாஸ் மாஸ் ஸ்பீச்..!
இப்படி இருக்க, திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இப்படம் மே 9 அல்லது 10ம் தேதி பிரபல ஓடிடியான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ரூ. 90 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க, இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தனது பாடலுக்காக உரிமைகோரி இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவரை தொடர்ந்து, விட்பா முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கங்கை அமரன், குட் பேட் அக்லி படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடலுக்கு எந்த கைத்தட்டல்களும் விழாமல் எங்கள் பாடலுக்கு மட்டுமே கைதட்டல் விழுகிறது. ஆக, எங்கள் பாடலை போட்டு நீங்கள் நடனம் ஆடினால் என்ன அர்த்தம். அப்பொழுது ஒரு உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ரூ.7 கோடி சம்பளம் வாங்கி படத்திற்கு இசையமைத்தவரின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை. எங்கள் பாடலை போட்ட உடனே படம் ஹிட் ஆகிறது படத்திற்கு கைத்தட்டல் வருகிறது.
இப்படி எங்கள் பாட்டினால் படம் ஹிட் ஆகும்பொழுது எங்களுக்கும் ஏன் சம்பளத்தில் பங்கு கொடுக்க கூடாது. அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? ஹிட் கொடுக்கும் அளவிற்கு இசையமைத்த எங்களிடம் பாட்டிற்கான அனுமதி வாங்க வேண்டும் இல்லையா? உண்மையிலேயே நீங்கள் மதித்து அனுமதி கேட்டிருந்தால் அண்ணன் இளையராஜா இலவசமாக பாடலை கொடுத்திருப்பார். கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது.
உண்மையில் வழக்கு தொடர்வது பணத்தாசையால் இல்லை. அது எங்களிடமே அதிகம் கொட்டிக்கிடக்கிறது. விதி என்று ஒன்று உள்ளது. ஹிட்டானது அஜித் படம் இல்லை, அதில் வந்த எங்கள் பாட்டு தான். உங்கள் இசையமைப்பாளரால் செய்ய முடியாததை எங்கள் பாட்டு செய்து படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது. ஆக அதை முறைப்படி கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக கொடுத்திருப்போம்' என்றார்.
இப்படி படம் ஒருபக்கம் வெற்றியடைந்தாலும் மறுபக்கம் பல இடறல்களை சந்தத்துதான் வருகிறது. ஆனாலும் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது மலையாள சினிமாவிலும் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் மலேசியாவில் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் படம் வெளியான 12 நாட்களில் மட்டும் ரூ.244 கோடி வசூல் செய்துள்ளது. மலேசியாவில் இதுவரை 6 மில்லியன் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்த சூழலில் அஜித்தின் ரசிகர்கள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளதாக ஆரவாரம் செய்து வருகினறனர்.
இதையும் படிங்க: 'குட், பேட், அக்லி' பாடல் சர்ச்சை.. இளையராஜா எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்.. இயக்குநர் சி.எஸ். அமுதன் நெகிழ்ச்சி!