×
 

AK என்றால் சும்மாவா..! ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தற்பொழுது ரேஸில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அஜித் குமார். 

நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது. 

இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர். 

இதையும் படிங்க: கார் ரேஸுக்கு தயாராகும் நடிகர் அஜித் குமார்..! போட்டோ வெளியிட்ட AK அணியினர்..!

இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

இப்படி பல படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தாலும் அவர் யாருக்கும் தெரியாமல் செய்யும் உதவிகளாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். உதாரணமாக 2014-ம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்யும் 12 பேருக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும், 2018-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன் விமானம் ஒன்றினை உருவாக்கி அசத்தினார். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் குழு ஒன்றை அமைத்து  உதவி செய்தார். 

இப்படி இருக்க,  நடிகர் அஜித், ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த இவர் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார்.  இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

இதனை அடுத்து தனது அணிகளை அழைத்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கார் பந்தயங்களில் கலந்து கொண்டு மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் தற்பொழுது பங்கேற்றுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் இந்த பந்தயத்தின் வெற்றி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், தற்பொழுது நடிகர் அஜித் அதே ரேஸிற்கு மீண்டும் தயாராகும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, தற்பொழுது இந்த ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதுவரை இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில் தற்பொழுது வெளிப்பதக்கத்தை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 மேலும், இந்திய மோட்டார்ஸ் போர்ட்ஸுக்கு இது பெருமையான தருணம் என ரசிகர்கள் இந்த வெற்றியை  கொண்டாடி வருகின்றனர்.  

இதையும் படிங்க: மங்காத்தா 2 குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..! பயங்கர குஷியில் அஜித் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share