அஜித் ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள்..! வெளுத்து வாங்கிய AK ரசிகர்கள்..! குளிர் காய்ந்த ப்ளூ சட்டை..!
ப்ளூ சட்டை மாறன் பதிவால் கொதித்து போய் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
ஒவ்வொரு முறையும் அஜித் விஜய் படங்கள் வெளியாகும் பொழுது தல-யா தளபதியா என்ற பிரச்சனைகள் வருவது வழக்கம். இந்த பிரச்சனை முதலில் வாயில் ஆரம்பித்து பின்பு கைகலப்பில் முடியும். சில நாட்களாக இப்படி பட்ட சம்பவங்கள் நடக்காத சூழலில் தற்பொழுது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க, நடிகர் அஜித்தின் 63வது படமாக பார்க்கப்படும் திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'.
இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார். மேலும் படத்தில் வந்த சிம்ரன் பாடலான "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல் மற்றும் அஜித்தின் "ஆளுமா டோலுமா" பாடல் வரும்பொழுது எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது.
இதையும் படிங்க: பிரியா வாரியருக்கு போட்டியாக இறங்கிய நடிகர் பிரசன்னா..! அஜித்தை பாராட்ட இணையதளத்தில் போட்டி போடும் பிரபலங்கள்..!
மேலும், படத்தை குறித்தும் அஜித்தை குறித்தும் நடிகர் பிரசன்னா கூறுகையில், "எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த உன்னதமான மனிதருடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன், லவ் யூ அஜித் சார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி" என தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து, இப்படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு அர்ஜுன் தாஸுடன் நடனம் ஆடி அசத்திய பிரியா வாரியார் அஜித்தையும் படக்குழுவினரையும் புகழ்ந்து பதிவிட்டார். அதில், " இதை நீண்ட காலமாக சொல்ல காத்திருந்தேன். உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது.
முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள்.
Cruise கப்பலில் பயணித்த போது நாம் ஒன்றாக சாப்பிட்ட உணவு, அடித்த ஜோக்குகள், அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது. உங்களை போல ஒருவரை நான் பார்த்தது இல்லை. கார், குடும்பம், பயணம் செய்வது, ரேசிங் போன்ற விஷயங்களை பற்றி பேசும்போது உங்கள் கண்கள் மாறும் விதம் அப்படி இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பார்த்து கவனித்து அவர்களை பாராட்டுவீர்கள். உங்களது பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு தான் என்னை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. என தெரிவித்திருந்தார்.
இப்படி இருக்க, ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் நடிகர் விஜயை குறித்தும் அவரது கட்சியை குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னையில் குட் பேட் அக்லி ஓடும் ஒரு தியேட்டருக்கு சென்ற சில விஜய் ரசிகர்கள் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது TVK.. TVK என கத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் சிலர், விஜய் ரசிகர்களை தாக்கியிருக்கிறார்கள். இதனால் சில நிமிடங்கள் படம் நிறுத்தப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்ற காணொளி அதில் இருந்தது. அதன்கீழ் ‘சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி’ என பதிவிட்டுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் .
இதனால் மீண்டும் தல தளபதி ரசிகர்கள் இடையே பெரிய மோதல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் அலட்டாக உள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் அஜித் குறித்து அட்டகாசமான பதிவு.. அப்படி என்ன சொல்லியிருக்காங்க பிரியா வாரியர்..?