கேமராவுக்கு பின் நடிகர்களின் கோர முகம்..! ஹீரோக்கள் மீது மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு..!
நடிகர்களை குறித்து தான் கண்ட உண்மைகளை தெளிவாக கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
"நீங்கள் என்னை அழைத்த பொழுது, ஏதோ கேண்டில் லைட் டின்னருக்கு தான் அழைத்தீர்கள் என்று நினைத்தேன்" என சுட்டித்தனமாக டைலாக் பேசி விஜய் முதல் பல இளசுகள் வரை கவர்ந்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்திருக்கும் இவரை எதற்காக லோகேஷ் கனகராஜ் வைத்தார் என்ற சந்தேகமும் பலருக்கு வரும், அந்த அளவிற்கு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார் இவர்.
இப்படி இருக்க, "அந்த கண்ணை பார்த்தாக்க காதல் தானாக தோன்றாத" என்ற பாடல் நடிகைக்கு பொருந்தும் என்றால் உண்மையிலேயே அது மாளவிகா மோகனனுக்கு தான் பொருந்தும். அந்த அளவிற்கு உயரமும் அழகும் உடையவர். இவர் நடித்த தமிழ் படங்களின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்பொழுது அனைத்து மொழி சினிமாத்துறையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர்..! நடிகை மாளவிகா மோகனன் காட்டம்..!
இந்த சூழலில், இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், அதன் பின் தான் மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற திரைபடங்களில் நடித்தார். இது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பலரது மனதையும் கொள்ளை கொண்டிருப்பார்.
இதனை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் "சர்தார் 2" திரைப்படத்தில் கதாநாயகியாகவும், தெலுங்கில் மாருதி இயக்கத்தில் முதன்முறையாக பிரபாஸ், நிதி அகர்வால், சஞ்சய் தத் ஆகியோருடன் இணைந்து ‛தி ராஜா சாப்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சூழலில், ஏற்கனவே தனக்கு மும்பை ரயில் நிலையத்தில் நடந்த மோசமான சம்பவங்ககளை குறித்து பேசியிருந்த மாளவிகா மோகனின் பேச்சுக்கள் வைரலான நிலையில், தற்பொழுது கதாநாயகர்கள் குறித்து அவர் பேசிய காணொளியும் வைரலாகி வருகிறது. அதில், "சினிமாவில் நான் பார்த்த சில நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை வெளியில் அதிகமாக காட்டிக்கொள்வார்கள்.
அவர்களுக்கு எப்பொழுது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் அந்த முகமூடியை அணிந்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி இருக்க, எனது 5 ஆண்டு கால சினிமா பயணத்தில் இப்படி முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் கேமராக்கள் முன்பாக பெண்களை தெய்வம்போல சித்தரித்து பேசும் பல நடிகர்கள், கேமராவுக்கு பின் பெண்கள் விஷயத்தில் எப்படிபட்டவர்களாக மாறுவார்கள் என்பதை என் கண்களுக்கு முன்பாக பார்த்து இருக்கிறேன். எதுக்கு இந்த வெளிவேஷம், நாடகம் எல்லாம். இந்திய சினிமா ஆண் என்றால் ஒரு மாதிரியும், பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்ப்பது என்று மாறும் என எனக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இது போன்ற பாகுபாடு எப்பொழுது முடிவுக்கு வருகிறதோ அப்பொழுது தான் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பும் உரிமையும் வரும்" என கூறினார்.
இதையும் படிங்க: "இந்த அசிங்கம் உனக்கு தேவையா கோபி"..! மாளவிக மோகனனிடம் வாங்கிக்கட்டி கொண்ட ரசிகர்..!