×
 

"இந்த அசிங்கம் உனக்கு தேவையா கோபி"..! மாளவிக மோகனனிடம் வாங்கிக்கட்டி கொண்ட ரசிகர்..!

இன்ஸ்டா பதிவில் ஆர்வமாக பதிவிட்ட ரசிகருக்கு காட்டமாக பதில் கூறியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். 

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகர் மோகன்லால், தனது பள்ளி பருவ நாட்களில் இருந்தே நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்வர் என்பதால் அதற்காக அயராது உழைத்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் பள்ளியில் முடித்த இவர், தனது அடுத்தகட்ட படிப்பை மகாத்மா காந்தி கல்லூரியில் தொடர்ந்தார்.

அப்பொழுது நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் அதிக நாட்டம் கொண்ட நபர்களுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர் என உருவெடுக்க, அவர்களின் மூலமாக இவரும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 

1978ம் ஆண்டு "திறநோட்டம்" என்ற படத்தில் முதல்முறையாக நடித்தார் மோகன்லால். ஆனால் தணிக்கைக் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது. அதற்கு பின், 1980 ஆம் ஆண்டு "மஞ்சில் விரிஞ்ச பூக்கள்" என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். பின் பல படங்களில் நடித்து வந்த மோகன்லால், 1983 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். 

இதையும் படிங்க: வருமானவரி துறையினர் பிடியில் பிருத்விராஜ்...! எல் 2 எம்பூரான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

இப்படி இருக்க, 1978ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்த மோகன்லால், ஒன்பது முறை 'கேரள மாநில அரசு விருதையும்', பத்து முறை 'ஃபிலிம்ஃபேர் விருதும்' பெற்றிருக்கிறார். இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு 'பத்ம ஸ்ரீ விருதை' வழங்கி கௌரவித்தது.

பின், 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் 'லெப்டினன்ட் காலோனல்' பதவியை வழங்கியது, இவ்விருதை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை கைப்பற்றிய மோகன்லால், அடுத்ததாக  'ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம்' இவருக்கு 'கௌரவ டாக்டர்' வழங்கி கௌரவித்தது. இப்படி பல விருதுகளுக்கு சொந்தமானவர் மோகன்லால். 

இவரை போலவே, 2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகமான மாளவிகா மோகனன், மலையாள திரையுலகம் மட்டுமல்லாது மற்ற திரைத்துறையான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

குறிப்பாக 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி, அதன்பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படத்தில் நாயகியாக வந்து "அந்த கண்ணை பார்த்தாலே" என்ற பாடலில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார் மாளவிகா மோகனன். 

இந்த சூழலில், இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் உடன் இணைந்து "ஹிருதயபூர்வம்" என்கிற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன் அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்து இருந்தார் மாளவிகா மோகனன். அவர் பதிவிட்ட பதிவில், "மோகன்லால் சார், சத்யன் சார் போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

அவர்கள் சினிமா மாயாஜாலத்தை எவ்வளவு உயிர்ப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தேன். இதையெல்லாம் அவர்கள் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் செய்கிறார்கள். தேக்கடியின் அழகான மலைகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் ஒரு மகிழ்ச்சியான மாதத்தைக் கழித்தேன். குளிர்ந்த மாலைகளில் என்னை இதமாக வைத்திருக்க முடிவில்லா எலுமிச்சை தேநீர் குடித்தேன். உதவி இயக்குநர்களின் அழகான குழு இல்லாமல் இந்தப் படம் இப்படி இருந்திருக்காது” என நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டு இருந்தார். 

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், மாளவிகா பதிவில் கமெண்டாக "65 வயதாகும் நடிகர், 30 வயதான நடிகைக்கு ஜோடியாக நடிப்பதா? என கேள்வி கேட்கும் வகையில் பதிவு செய்தார். இதனை பார்த்த மாளவிகா மோகனன் அவருக்கு பதில் கூறும் விதமாக, " ஜோடியாக நான் நடிப்பதாக யார் கூறினார். எதுவும் தெரியாமல் நீங்களாவே ஒரு முடிவுக்கு வர வேண்டாம்" என ரசிகருக்கு கமெண்ட்டிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார். 

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கதாநாயகியாக வரவேண்டாம் நீங்கள் படத்தில் வந்தால் மட்டும் போதும் உங்களை பார்த்த திருப்தியில் சென்று விடுவோம் என கூறிவருகின்றனர்.  

இதையும் படிங்க: ஒரே வழக்கு.. 24 காட்சிகள் நீக்கம்..! ஒரு நொடியில் ஃபிளாப் ஆன எல்2எம்பூரான் திரைப்படம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share