×
 

இளையராஜாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல பாடகி..! சிம்பொனி நிகழ்ச்சிக்கு பின் இப்படி ஒரு அதிசயம்..!

சிம்பொனி நிகழ்ச்சிக்கு பின் பல பாராட்டுகளையும் சர்ச்சைகளிலும் சிக்கிய இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார் பிரபல பாடகி. 

இசையமைப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இளையராஜா, தற்பொழுது வரை பல்லாயிரம் பாடல்களை இசைத்து திரையுலகிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். இவர் இசையமைப்பதுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் இசைகளை ரசிகர்கள் மனதில் அலைபாய விடுவதில் வல்லவர். அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் லண்டனில் 'சிம்பொனி' இசையை 1½ மணி நேரம் அரங்கேற்றி, ஆசிய கண்டத்திலேயே சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இளையராஜாவை அடுத்து, லிடியன் நாதஸ்வரத்தை வைத்து இளையராஜா சிம்பொனி அரங்கேற்ற போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம் தான். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா..! என அவருக்கு அறிவுரை வழங்கி தற்பொழுது அனுப்பி வைத்தாக பதிவிட்டு இருந்தார். 

இதையும் படிங்க: அப்ப விஜய்.. இப்ப இளையராஜா.. ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய இளையராஜா.. திகைக்க வைத்த ஒற்றை பதிவு..!

இந்த பதிவை பார்த்து இளையராஜாவை பலரும் சாடினர். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளம் வாயிலாக இளையராஜாவை சாடினார். அதில், தற்போது சிம்பொனியில் தனக்கு போட்டியாக இன்னொரு தமிழன்.. அதுவும் 20 வயது சிறுவன் வந்துவிடக்கூடாது எனும் எரிச்சல் தான் இவரை இப்படி பேச வைத்துள்ளது. ஆனால் திரையிசையில் உங்கள் சகாப்தத்தை வீழ்த்திய ரஹ்மானை போல.. சிம்பொனி, திருக்குறள் பிண்ணனி இசையென தமிழர்களின் புகழை உலகெங்கும் கொண்டு செல்லப்போகும் லிடியனும் ஜெயிப்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் ராஜா‌. நீங்கள் இதுவரை ஒரு இசைக்கலைஞரையும் உருவாக்கியதில்லை‌. ஒரே ஒரே சிறுவன் உங்களை குருவாக ஏற்று வந்தான். அவனுக்கு நீங்கள் அளித்துள்ள கசப்பான  பரிசு இதுதான். உங்கள் இசையின் மேன்மையை.. உங்கள் ஆணவம் தொடர்ந்து கீழே இறக்கி வருகிறது‌. உங்கள் இசையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான திமிர் பிடித்த பேச்சுகளையோ, பிறரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படும் செயல்களையோ அல்ல. எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்தப் போவதும் இல்லை‌ ஏனெனில் எல்லை மீறிய செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள். என கடுமையாக தாக்கி பதிவிட்டு இருந்தார். 

இப்படி பட்ட பதிவுகளை பார்த்த லிடியன் நாதஸ்வரம், பேசியவர்கள் அனைவருக்கும் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், முதலில் இளையராஜா எனக்கு குரு. அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை, எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் மனிதன்.ஆனால் மனதில் ஒன்றும் இருக்காது. அவரது பேச்சை கேட்கும் பொழுது கோபம் வரும் ஆனால் அதன் உள்அர்த்தத்தத்தை புரிந்தால் தான் விளக்கம் புரியும். ஆதலால் அவர் சிம்பொனி பற்றி என்னிடம் பேசும்போது, நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையமைத்து நிறைய விருதுகளை வாங்கு, பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துவிடு என தன்னிடம் கூறியதாக என தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் மேலும் இளையராஜாவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பல்வேறு மொழிகளில் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர் மற்றும் பலரின் இசையில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பாடகி ஷாலினி சிங் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்று இருக்கிறார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள் "இளையராஜா நல்லவர் தான். அவர் பேசுவதை நாங்களும் கொஞ்சம் சிந்துத்து பார்க்கிறோம்" என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்ப விஜய்.. இப்ப இளையராஜா.. ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய இளையராஜா.. திகைக்க வைத்த ஒற்றை பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share