அப்ப விஜய்.. இப்ப இளையராஜா.. ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய இளையராஜா.. திகைக்க வைத்த ஒற்றை பதிவு..!
நடிகர் விஜயை தொடர்ந்து தற்பொழுது. இளையராஜாவை வம்பிழுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்..!
தமிழ் திரையுலகில் ப்ளூ சட்டை மாறன் ரிவியூவுக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் பயந்து கொண்டு தான் இருப்பார்கள் தற்பொழுது சினிமாவை தாண்டி அரசியல் பொது நிகழ்ச்சி சார்ந்த நிகழ்வுகளுக்கும் ப்ளூ சட்டை மாறன் ரிவியூ கொடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் போடப்பட்ட சைவ உணவகத்தை பற்றி ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் அதில், "தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும் சைவம் தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம் அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம். கலந்து கொள்பவரில் எத்தனை பேர் சைவம், எத்தனை பேர் அசைவ உணவை விரும்பகிறார்கள் எனும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பே தயார் செய்து விடுவார்கள். ரஜினி, கட்சி ஆரம்பிக்கப் போவதாக பரபரப்பை கிளப்பிய காலத்தில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் மதுரை ரசிகர்களை சந்தித்தார், அப்போது உங்களுக்கு அசைவ உணவு போட ஆசை, ஆனால் இது சைவ மண்டபம் என கூறினார்.
பக்கத்தில் வேறு மண்டபம் அல்லது வேறு இடத்தை புக் செய்து அவர்களுக்கு அசைவ உணவு பரிமாறுவதில் என்ன பிரச்சனை?. பல மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு தொண்டர்களுக்கும் சைவம் மட்டுமே பரிமாறினார் ரஜினி.அப்போது இது சர்ச்சையை கிளப்பியது.அவரைப்போல விஜையும் பாஜகவின் உணவு முறையை பின்பற்றுவது போல இருக்கிறது. தனது மேலிடத்துக்கு உணவு கொள்கையை தவெக தொண்டர்கள் மற்றும் ஊக்கத்தொகை பெற வரும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரின் மீது திணிக்கிறாரா விஜய்?" என ப்ளூ சட்டை மாறன் கேட்டது தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சப்தம் படத்தில் சத்தம் தான் இருக்கு...நெகட்டிவ் கமெண்ட் கொடுத்த ப்ளூ சட்டை..!
இதனை தொடர்ந்து சப்தம், ஜிவி பிரகாஷின் புது படமான கிங்ஸ்டன் படத்திற்கு ரிவியூ போட்டுவிட்டு பிசியாக இருப்பார் என்று பார்த்தால் அடுத்து தனது எக்ஸ் தல பக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை வம்பிழுத்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் இளையராஜாவின் 'தி வாலியன்ட்' சிம்பொனி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.இந்த நிலையில் இளையராஜாவை தொடர்ந்து, லிடியன் நாதஸ்வரத்தை வைத்து சிம்பொனி அரங்கேற்ற போவதாக தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம் தான். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா..! என அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தாக பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில்,
# தனது 14 வயதிலேயே World's Best Talent போட்டியில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெற்றவர் லிடியன் நாதஸ்வரம்.
# 2022 ஆம் ஆண்டு இளையராஜாவை சந்தித்த பிறகு தன்னை அவரது முதல் மற்றும் ஒரே சீடனாக ஏற்றதை மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் குறிப்பிட்டார்.
# தற்போது திருக்குறளின் 1,330 குறள்களுக்கும் பின்னணி இசையமைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறார் லிடியன்.
# இந்த இசைத்தொகுப்பு வெளியானால் தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் எதிரொலிக்கும்.
# பியானோ, ட்ரம்ஸ் உள்ளிட்ட கருவிகளை வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியவர்.
# இவருக்கு தற்போது வயது 20 மட்டுமே.
# 80 வயதை தாண்டிய இளையராஜாவிடம் சிம்பொனி இசை குறித்த விளக்கங்களை சமீபத்தில் கேட்டுள்ளார். அதில் தான் செய்த இசை முயற்சியையும் அவருக்கு காட்டியுள்ளார்.
# தனது பேரன் வயதுள்ள சிறுவன் மற்றும் ஒரே சிஷ்யன் என்பதால்.. லிடியனுக்கு இவரே சிம்பொனி பயிற்சி அளித்திருக்க வேண்டும்.
# ஆனால் உனது சிம்பொனி இசை சினிமா பாடல் போல உள்ளது. சிம்பொனியை முழுமையாக கற்றுக்கொண்டு வா எனக் கூறியுள்ளார்.
# அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இதை பொதுவெளியிலும் கூறி லிடியனை சிறுமைப்படுத்துவது.. பெரிய மனிதனுக்கு அழகா?
# திரை இசையில் தன்னை மீறி எவனுமில்லை என்று ஆடியபோது.. ரஹ்மான் வந்து இவரது கொட்டத்தை அடக்கினார்.
# அப்போது ஆரம்பித்த சரிவு.. 33 ஆண்டுகள் ஆகியும் மீளவில்லை.
# தற்போது சிம்பொனியில் தனக்கு போட்டியாக இன்னொரு தமிழன்.. அதுவும் 20 வயது சிறுவன் வந்துவிடக்கூடாது எனும் எரிச்சல் தான் இவரை இப்படி பேச வைத்துள்ளது.
# ஆனால் திரையிசையில் உங்கள் சகாப்தத்தை வீழ்த்திய ரஹ்மானை போல.. சிம்பொனி, திருக்குறள் பிண்ணனி இசையென தமிழர்களின் புகழை உலகெங்கும் கொண்டு செல்லப்போகும் லிடியனும் ஜெயிப்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் ராஜா.
# நீங்கள் இதுவரை ஒரு இசைக்கலைஞரையும் உருவாக்கியதில்லை. ஒரே ஒரே சிறுவன் உங்களை குருவாக ஏற்று வந்தான்.
# அவனுக்கு நீங்கள் அளித்துள்ள கசப்பான பரிசு இதுதான்.
# உங்கள் இசையின் மேன்மையை.. உங்கள் ஆணவம் தொடர்ந்து கீழே இறக்கி வருகிறது.
# உங்கள் இசையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான திமிர் பிடித்த பேச்சுகளையோ, பிறரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படும் செயல்களையோ அல்ல.
# எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்தப் போவதும் இல்லை ஏனெனில் எல்லை மீறிய செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள்." என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக சாடியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இளையராஜாவின் பதிவுகளை தேடி பார்ப்பதுடன் லிடியனுக்கு ஊக்கமும் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சைவ உணவுக் கொள்கையை விஜய் பரப்புகிறார்... சர்ச்சையில் ப்ளூ சட்டை மாறன்...!