ரெட்ரோ படம் வெற்றிக்காக ஜோதிகா சூர்யா தம்பதி சிறப்பு பூஜை..! இருவரின் பக்தி பரவசத்தால் ரசிகர்கள் ஆச்சர்யம்..!
மே மாதம் வெளியாக உள்ள படத்திற்காக சிறப்பு பூஜை செய்து உள்ளனர் சூர்யா மற்றும் ஜோதிகா.
நடிகர் நடிகையான சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் தற்பொழுது மும்பையில் குடியேறி உள்ளனர். இதனை பற்றி சூர்யா கூறுகையில், எனது மனைவி எனக்காக எல்லாவற்றையும் விட்டு என்னுடன் இருக்கிறார். அவருக்கு பிரதி பலன் செய்ய ஜோதிகாவுடன் அவர் தாயார் வீட்டிற்கு சென்று உள்ளதாக கூறி இருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் கணவன் மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அனைவரும் பேசும் அளவிற்கு வாழ்ந்து வரும் சூர்யா ஜோதிகா, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையில் சூரரைபோற்று படத்திற்கான தேசிய விருதை பெற்றபொழுது இருவரின் கலாச்சார ஆடையை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
இதில், நடிகை ஜோதிகா, "டோலி சஜா கே ரக்னா" என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானவர். தமிழிலில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் "வாலி" படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இவர் தனது கணவரான சூர்யாவுடன் நடித்த முதல் திரைப்படம் "பூவெல்லாம் கேட்டுப்பார்".
இதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்த ஜோதிகா, தனது திருமணத்திற்கு பின் தனி கதாயாகியாக ராட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பெண்கள் முன்னேற்றத்திற்கான படங்களில் நடித்து வருகிறார். முற்றிலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதாநாகனும் இல்லாமல் தனி ஸ்டாராய் படத்தில் கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: ரெட்ரோ ஆக்ஷன் படம் அல்ல... யாரும் பார்க்காத காதல் படம்..! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்..!
இவரை போல், நடிகர் சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் 1999-ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், நந்தா, பிரெண்ட்ஸ், உன்னை நினைத்து, போன்ற படங்களில் பிரபலமாக ஆரம்பித்து, வரிசையாக காக்க காக்க, பிதாமகன், கஜினி, அயன், சிங்கம், சூரரைபோற்று, அஞ்சான் என இன்று பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். திரைப்படம் மட்டும் அல்லாது, இதுவரை, டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்பீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ் மற்றும் இமாமி நவரத்தினா தயாரிப்பு, க்ளோஸ் அப், மலபார் கோல்ட் முதலான விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா.
இப்படி இருவரும் இன்றும் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்த சூழலில், தனது கணவரான சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் குறித்து சமீபத்தில் பேசிய நடிகை ஜோதிகா, "பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல திரைப்படங்கள் தரம் குறைந்த திரைப்படங்கள் தான், அவைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களே மிகவும் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவைகளை விட என் கணவர் சூர்யாவின் படம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை பார்த்தேன்.
இது எனக்கு அநீதியாக தெரிகிறது. ஏனெனில் இத்திரைப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமலேயே இருக்கலாம். ஆனால், படத்திற்காக மிக கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கிறார்கள். எனினும், சில மோசமான படங்களை விமர்சனம் செய்யாதவர்கள் இந்த படத்திற்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த போது அது என்னை பாதித்தது. அதுமட்டுமல்லாமல், ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என கூறினார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் மே மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி இருக்க, தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக ரெட்ரோ திரைப்படம் வெற்றி அடைய கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து இருக்கின்றனர்.
மேலும், ஜோதிகாவின் அடுத்த படத்தை மகாராஷ்டிராவின் கோலாப்பூர் என்னும் பகுதியில் தொடங்க உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மஹாலக்ஷ்மி கோவிலுக்கு சென்று இருவரும் தரிசனம் செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: நான் வெயிட் லாஸ் பண்ண காரணம் இந்த ஹீரோயின் தான்...! 3 மாதத்தில் நடந்த அதிசயம்..! நடிகை ஜோதிகா பேச்சு..!