×
 

நான் வெயிட் லாஸ் பண்ண காரணம் இந்த ஹீரோயின் தான்...! 3 மாதத்தில் நடந்த அதிசயம்..! நடிகை ஜோதிகா பேச்சு..!

நான் வெயிட் லாஸ் பண்ண காரணமான ஹரோயின் பெயரை கூறி நன்றி தெரிவித்து இருக்கிறார் நடிகை ஜோதிகா..!

"டோலி சஜா கே ரக்னா" என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜோதிகா. இவர் தமிழிலில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்து வெளியான "வாலி" படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இவர் தனது கணவரான சூர்யாவுடன் நடித்த முதல் திரைப்படம் என்றால் அது நம் அனைவருக்கும் தெரிந்த "பூவெல்லாம் கேட்டுப்பார்" படம் தான்.

இதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்த ஜோதிகா, தனது திருமணத்திற்கு பின் தனி கதாயாகியாக ராட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பெண்கள் முன்னேற்றத்திற்கான படங்களில் நடித்து வருகிறார். 

இப்படி இருக்க, சமீபத்தில் ஜோதிகா தனது கணவரான சூர்யா மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் கையோடு மும்பை அழைத்து சென்று அங்கேயே குடியேறி உள்ளார். இதனை பற்றி சூர்யா கூறும்போது, எனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த 'ஜோ'வுக்காக நானும் எனது குழந்தைகளும் மும்பை வந்துவிட்டோம் என்றார். ஆனால் ஜோதிகா கூறும் பொழுதோ, தனது தாய் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை, அவர்களை பக்கத்திலிருந்து பார்த்து கொள்ளவும், தமிழகத்தில் தங்கள் குழந்தைகைகளின் படிப்பிற்கு ஏற்ற பள்ளிகள் இல்லை என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் மும்பைக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சும்மா.. கிரிக்கெட் வீரனாக நடிக்க முடியாது.. அதற்கும் பயிற்சி வேண்டும்..! டெஸ்ட் பட நடிகர் சித்தார்த் ஆவேசப் பேச்சு..!

இதனை தொடர்ந்து, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் ஜோதிகா. இந்த நிலையில், சமீபத்தில் மகளிர் தினத்தன்று ஜோதிகா தனது கருத்தை பொதுவெளியில் கூற அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அப்படி ஜோதிகா கூறுகையில், "மற்ற சினிமாவை போல் தென்னிந்திய சினிமா இல்லை. இங்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளது. பெண்களை சிறப்பு பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாட வைப்பதற்கும், ஆண் நடிகர்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

அந்த பழக்கம் இன்றும் இங்கு மாறவில்லை. அதனால் தான், நான் வேறு பாதையை தேடி, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்தேன். பெரும் பாலும் ஹீரோக்கள் உள்ள படங்களுக்கு நோ கூறியுள்ளேன்" என்று தெரிவித்தார். இதனால் தயாரிப்பாளர்கள் கொதித்துப்போய் அமர்ந்திருக்க, சிறிது நாட்கள் கழித்து மற்றொரு பேட்டியில் தனது கணவர் நடித்த "கங்குவா" படத்திற்காக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

அதில் ஜோதிகா கூறுகையில், "பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல திரைப்படங்கள் தரம் குறைந்த திரைப்படங்கள் தான், அவைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களே மிகவும் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவைகளை விட என் கணவர் சூர்யாவின் படம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை பார்த்தேன். இது எனக்கு அநீதியாக தெரிகிறது. ஏனெனில் இத்திரைப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமலேயே இருக்கலாம். ஆனால், படத்திற்காக மிக கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கிறார்கள்.

எனினும், சில மோசமான படங்களை விமர்சனம் செய்யாதவர்கள் இந்த படத்திற்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த போது அது என்னை பாதித்தது. அதுமட்டுமல்லாமல், ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என கூறினார். இது இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், நடிகை ஜோதிகா சமீபத்தில் குண்டாக இருந்து ஒல்லியாக மாறி இருப்பதால் அதன் ரகசியம் என்ன? என பல இல்லத்தரசிகள் கேட்டு வந்தனர். தற்பொழுது அதற்கு பதிலளித்து உள்ளார் நடிகை ஜோதிகா. அதன்படி, குண்டாக காணப்பட்ட நான் 3 மாதங்களில் 9 கிலோ வரையில் எனது உடல் எடையை குறைத்ததற்கு உதவியாக இருந்தது எனது ஊட்டச்சத்து நிபுணர்கள் தான்.

அந்த குழுவினரை எனக்கு அறிமுகப்படுத்திய நடிகை வித்யா பாலனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அமுரா குழுவினரின் உதவியாலும், சரியான உடற்பயிற்சி மேற்கொண்டதாலும் தற்பொழுது எனது உடல் எடை குறைந்து உள்ளேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எனது கணவரின் படத்தை எப்படி இழிவாக பேசலாம்... கொந்தளித்த நடிகை ஜோதிகா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share