×
 

துணை நடிகையிடம் கல்லா கட்டிய காதல் சுகுமார்..! நேரம் பார்த்து சிக்க வைத்த பெண்..!

காதல் சுகுமார் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார் துணை நடிகை ஒருவர்.

தமிழ் சினிமா வரலாற்றில் யாராலும் எடுக்க முடியாத அழகான  திரைப்படம் என்றால் அதுதான் காதல் திரைப்படம். இயக்குனர் சங்கரது அழகான படைப்பாக பார்க்கப்படும் இந்த படத்தில் காதல் தண்டபாணியின் மகளான சந்தியாவை மெக்கானிக்கான பரத் காதலித்து சென்னைக்கு அழைத்து கொண்டு திருமணம் செய்ய வர, அங்கு அவரது நண்பராக இருந்து உதவி செய்பவர் தான் சுகுமார். இந்த படத்தில் அவரது கேரக்ட்டர்  பலரது கவனத்தையும் ஈர்த்தபடியால் காதல் சுகுமார் என அழைக்கப்பட்டார்.  

இப்படி காதல் படத்தில் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய சுகுமார், காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட 50 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். பின், திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் போன்ற படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இப்படி ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த சுகுமாருக்கு, தற்பொழுது படவாய்ப்புகள் பெரிதாக கிடைப்பதில்லை என்பதால் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து கொடுத்தும் தனியார் சேனல்களுக்கு பேட்டிகள் அளித்தும் தன் வாழக்கையை நடத்தி வருகிறார். 

இதையும் படிங்க: 'அரண்மனை' குறித்து சுந்தர்.சி சொன்ன ரகசியம்..! வியப்பில் உறைந்து போனேன் - வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

இந்த சூழலில், பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியாத சுகுமார், துணை நடிகையை ஏமாற்றி வந்துள்ளார். அவருடன் மூன்று வருடங்களாக பழகிய அவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் உள்ள  நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றுவிட்டதாக அந்த நடிகை பரபரப்பு புகார் ஒன்றை காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மூன்று வருடங்களாக அவரை தனி விடு எடுத்து குடியமர்த்திய சுகுமார், அவருடனும் வாழ்ந்து வந்துள்ளார். பின் அவரிடம் உள்ள பணம் நகைகள் தீர்ந்து போக, அந்த நடிகையை கழட்டி விட முடிவு செய்து அவரது நம்பரை பிளாக் செய்து அவரை அலைய செய்திருக்கிறார். 

மேலும் தன்னிடம் சிக்கிய சுகுமாரிடம் என்னை ஏன் அவாய்ட் பண்ணுகிறாய் என அந்த நடிகை கேட்க, அவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் கடுப்பான நடிகை கடந்த ஜனவரி மாதம் சுகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் புகாரை வாபஸ் செய்ய சொல்லி நகைக்கான பணத்தை செக் மூலமாக தருவதாக உறுதி அளித்த சுகுமார் செக் கொடுத்துள்ளார். இதனை நடிகை பேங்கில் கொடுக்க, அவர்கள் செக் உள்ள அக்கவுண்டில் பணம் இல்லை என்றதால் கோபமடைந்த நடிகை மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து, மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இந்த புகாரை விசாரிக்க முன் வந்துள்ள மாம்பலம் அனைத்து மகளிர் காவல்துறை அதிகாரிகள், சுகுமார் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.

இதையும் படிங்க: எஸ்.வி சேகரை திருமணம் செய்த ஷோபனா..! சீரியல் புரோமோ ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share