எஸ்.வி.சேகரை திருமணம் செய்த் ஷோபனா...! சீரியல் புரோமோ ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!
சீரியலில் எஸ்.வி.சேகரை திருமணம் செய்த் ஷோபனா நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எஸ்.வி.சேகர் தனக்கு தாலி கட்டுவதை போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து இருந்தார் முத்தழகு சீரியல் மூலம் பிரபலமடைந்த "நடிகை ஷோபனா". இதனை பார்த்த ரசிகர்கள் முதலில் ஷாக் ஆக, பின் தீவிரமாக விசாரித்ததில் அது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் "மீனாட்சி சந்தரம்" என்ற சீரியலுக்கான ப்ரோமோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்கள் என்பது. இதை தெரிந்து கொள்ளாத சிலர் இதை வைத்து எஸ்வி சேகரை இன்னும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த சீரியலில் தன்னை மதிக்காத மகன் மற்றும் மருமகளுக்காக ஏன் வாழ வேண்டும்? என எண்ணி தனக்கு பிடித்த மாதிரி ஒருவாழ்க்கையை எஸ்.வி சேகர் தேர்வு செய்து இளம்பெண்ணான ஷோபனாமாவை திருமணம் செய்து கொள்ளும் கதையாக இந்த சீரியல் பார்க்கப்படுகிறது. மேலும் அந்த புரோமோவில் அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் மருமகள்கள் அவரை சுத்தமாக மதிப்பதில்லை.
ஆதலால் எஸ்.வி சேகருக்கு ஷோபனாவை திருமணம் செய்து வைக்கிறார் அவரது மகள். இதனை கோவிலுக்கு வந்த அவரது மருமகள் மற்றும் மகன்கள் பார்த்து அதிர்ச்சியாவதை போல் இருந்தது. சிரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இவர் வாழ நினைத்தால் வயதான ஒரு பெண்மணியை திருமணம் செய்திருக்கலாம். ஆனால் இளம் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டுமா என இந்த சீரியலை ட்ரோல் செய்து வருவதுடன் இன்றுவரை இலவசமாக ஃபரமோஷனும் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதையும் படிங்க: இளம் நடிகையை திருமணம் செய்த எஸ்.வி.சேகர்..! கண்ணீர் விட்டு கதறும் நெட்டிசன்கள்..!
அதுமட்டுமல்லாமல், இந்த சீரியலில் நடிக்கும் ஷோபனா, ஏற்கனவே முத்தழகு சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகை தான். அது போல இப்போது மற்றொரு தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "பூங்காற்று திரும்புமா" என்ற சீரியலிலும் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். அந்த சீரியலுக்கான ப்ரோமோக்களும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இந்த ஃப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சீரியலில் இவ்வளவு வயதுடையவருக்கு மனைவியாக நடிக்க ஷோபனா எப்படி ஒப்புக்கொண்டார் என கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஷோபனா. தனியார் சேனலுக்கு பேட்டியளித்த ஷோபனா, " தற்பொழுது நான் நடித்து வரும் "மீனாட்சி சந்தரம்" சீரியல் கொஞ்சம் சர்ச்சையான கதைக்களம் கொண்ட சீரியல் தான். அதனால் தான் கொஞ்சம் வித்தியாசமாக இந்த சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
சீரியலில் ஒரே விதமான ரோலில் தான் நடிக்க வேண்டும் என்று இல்லை, பல விதமான ரோல்களில் நடிக்கலாம். நாம் எப்படி நடித்தாலும் கொஞ்சம் பேர் நெகடிவ் ஆக தான் பேசப் போகிறார்கள். அப்படி நெகடிவ் கமெண்ட்ஸ் பல வந்தாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ன ஆகிவிட போகிறது என நினைத்து தான் நடித்தேன்.
அந்த ப்ரோமோவை பார்த்துவிட்டு என் நண்பர்கள் கூட அதிர்ச்சி ஆனார்கள். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு நண்பர்களிடம் கேட்டதற்கு தைரியமாக நடி என சொன்னவர்கள், ப்ரோமோவை பார்த்த பின் ஷாக் ஆனதாக கூறினார்கள்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சல்வார் அணிந்த சொர்க்கமே..! பிங்க் சல்வாரில் பளீச் என மின்னிய ஷிவானி நாராயணன்!