×
 

கமல்ஹாசனை கட்டி பிடித்ததால் 3 நாட்கள் குளிக்கவில்லை..! பிரபல நடிகர் ஓபன் டாக்..!

நடிகர் கமல்ஹாசனை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை உணர்ச்சி பொங்க சொல்லி இருக்கிறார் பிரபல நடிகர்.

கன்னட சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார். இதுவரை கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் உருவான தளபதி 69 படத்திலும் அவர் நடிப்பதாக முதலில் கூறப்பட்ட  நிலையில், தான் அதில் நடிக்கவில்லை என்று கூறி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தார். 

இவரை குறித்து சொல்லவேண்டுமானால் வீரப்பன் கதைக்கு செல்லவேண்டும். ஏனெனில் ஒருமுறை கன்னட சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தவர் சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார். இவரை கடத்தி வைத்து தான் வீரப்பன் அரசாங்கங்களை திணறடித்தார். இப்படிப்பட்டவரின் மகன்கள் தான் சிவராஜ்குமாரும், புனித் ராஜ்குமாரும். இவர்களில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டு இருந்த புனித் ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: தலைவர் பொறுப்பை ஏற்ற கமல்ஹாசன்..! பிக்கி மாநாட்டில் நடந்த சுவாரஸ்யம்..!

தனது சகோதரின் மறைவால் மனஉளைச்சலில் இருந்த சிவராஜ்குமாருக்கு புற்று நோய் வந்ததாக கூறி கடந்த மாதங்களில், மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றனர். தற்பொழுது உடல் நலம் சீராக இருப்பதாக  சிவராஜ்குமார் கூறியிருப்பார். நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பேசிய சிவராஜ்குமார், நான் ஜெயிலர் படத்தில் வந்தது என்னமோ ஒரு காட்சியில் தான் ஆனால் அதில் மக்களுக்கு என்ன பிடித்தது என தெரியவில்லை என்னை கொண்டாடுகின்றனர். மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. ஜெயிலர் 2வில் சிறந்த காட்சிகளில் தன்னை காணலாம் என படத்தில் நடிக்க இருப்பதை கூறினார். 

பின்னர் கமலஹாசனை குறித்து பேசிய சிவராஜ்குமார், "நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது சகோதரன் மறைவுக்கு பின் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இதனால் அமெரிக்காவிற்கு என்னை அழைத்து சென்று ஆபரேஷன் செய்தனர். ஆப்ரேஷன் முடிந்த சமயத்தில் நடிகர் கமலிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்த இரண்டே வார்த்தையில் என்னை மறந்து அழ ஆரம்பித்து விட்டேன். 

உண்மையில் ஹீரோ என்றால் கமல் மாதிரி தான் இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் மட்டும் பெண்ணாக பிறந்து இருந்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்து இருப்பேன். இதனை நான் பலமுறை உங்கள் மத்தியில் கூறியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். அதற்கு அப்பா இவன் என் மகன் என்றார்.

அப்போது நான் கமலை பார்த்து ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. ஏனெனில் கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்" என்றார்.

இதனை கேட்ட ரசிகர்கள் கமலுக்கு இப்படி ஒரு தீவர ரசிகனா என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: வடிவேலுவை வியக்க வைத்த இயக்குனர்..! ராட்சசி ஸ்டைலில் 3 உதாரணம் கூறி அசத்திய சுந்தர் சி..!  

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share