×
 

என்னை போல் குறைபாடு உடையவர் தான் எனது கணவர்.. நடிகை அபிநயா ஓபன் டாக்..!

நடிகை அபிநயா தனது கணவரை குறித்து பேசிய விஷயங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இயக்குனர் சசிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடிக்க அபிக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தேடி தந்ததை தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான "சம்போ சிவ சம்போ" திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான "ஹுத்துகாரு" என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவருடைய நடிப்பின் திறமைக்கு பரிசாக இதுவரை, இரண்டு பிலிம்பேர் விருதுகளை 'நாடோடிகள் மற்றும் சம்போ சிவ சம்போ' திரைப்படங்களுக்காக பெற்றார்.

இதனை அடுத்து, 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான "ஈசன்" திரைப்படத்திலும், 2011-ம் ஆண்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ஏழாம் அறிவு" திரைப்படத்திலும், தி ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும், ஜுனியர் என்.டி.ஆருடன், தெலுங்கு திரைப்படமான "தம்மு" என பல படங்களில் நடித்து உள்ளார்.

சமீபத்தில் மலையாள திரையுலகில் வெளியாகி, தற்பொழுது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்ற திரைப்படம் "பனி". இப்படத்தின் கதாநாயகியை இருவர் சீரழித்ததால் அவரது கணவர், இருவரையும் தேடி பிடித்து, வெடி பொருளை வைத்து அவர்கள் உடலை சிதைப்பார். இப்படி இந்த திரைபடம் பயங்கர ஹிட் கொடுத்தாலும், இப்படத்தில் தனது மௌனமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நடிகை அபிநயா. 

இதையும் படிங்க: சைலண்டாக நடைபெற்ற நடிகை அபிநயாவின் திருமணம்..! ஷாக்கில் திரை பிரபலங்கள்..!

இதனை தொடர்ந்து, அபிநாயாவுக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடந்து கேட்டு கொண்டிருக்க, தான் 15 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் அவருடன் திருமணம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில், சமீபத்தில் நடிகை அபிநயாவுக்கு அவரது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் மோதிரம் மாற்றிய இருவரின்  கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இப்படி இருக்க, எப்பொழுது தனது காதல் கணவரின் புகைப்படத்தை அபிநயா வெளியிடுவார் என அனைவரும் காத்து கொண்டிருக்க திடீரென ஒருநாள் தனது வருங்கால கணவரான கார்த்திக் போட்டோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு அதன்கீழ் "The easiest yessss" என குறிப்பிட்டு இருந்தார் அபிநயா. இப்படி இருக்க, நேற்று இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஷாக் ஆக, ஏப்ரல் 20ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி இருக்கும் கவலை வேண்டாம் மணமக்களை வந்து வாழ்த்தி செல்லுங்கள் என பதிவிட்டு இருந்தனர்.

இந்த சூழலில், அபிநயா அளித்த பேட்டியில், ‛‛நாடோடிகள் படத்தின் தெலுங்கு மொழி பதிப்பில் அதே கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு தெலுங்கு சினிமாவில் பெரிய அறிமுகத்தை எனக்கு கொடுத்தது. இதனை அடுத்து, என்னை போன்று குறைபாடு உடையவர்கள் பலரை இணைத்து ஒரு குரூப்பை உருவாக்கினோம். அந்த குரூப் நடத்திய பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் எனது கணவரான கார்த்திக்.

அவரும் என்னை மாதிரியே பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்டவர் தான். அவர் அங்கு வரும்பொழுது அவர் அக்காவுடன் தான் வந்திருந்தார். அவங்க அக்காவும் அவரைப்போலவே குறைபாடு சவால் கொண்டவர் தான். ரெண்டு பேருமே என்கிட்ட பாசமா பேசி நன்றாக பழகிட்டாங்க. இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் அம்மா தான். அவங்களோட பாசத்தை கார்த்தியிடம் உணர்ந்தேன். அதுதான், எங்க நட்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக செய்தது. முதலில் நட்பில் ஆரம்பமாக எங்களது வாழ்க்கை காலப்போக்கில் காதலாக மாறியது. 

இதனை தொடர்ந்து, அவரது குணம் எங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்திருந்தது. அதனால் தான் நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினராக இருந்தாலும் இரண்டு வீட்டிலேயும் ஓகே சொல்லிட்டாங்க. நான் நடிகையாக இருந்தாலும் கார்த்திக் ஒரு பிசினஸ் மேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில டைரக்டராக இருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்கு பிறகுதான் திருமணம் செய்ய நினைத்தோம். ஆனால் அம்மா இறந்து விட்டதால் தனிமையை போக்க திருமணம் செய்து கொண்டேன்'' என்கிறார்.

இதையும் படிங்க: தன்னை பற்றி அவதூறு பேசிய பிரபலம்..! பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலடி..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share