சூர்யா கொடுத்த Ghibli ஸ்டைல் அப்டேட்..! வெறித்தனமாக களமிறங்கும் "ரெட்ரோ"...!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்திற்கான மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் என படக்குழுவினர் நினைத்த நிலையில் அப்படம் பெரிதளவில் வெற்றியை கொடுக்காமல் முற்றிலுமாக பிளாப் ஆகி வசூலில் பின் தங்கியது. இதனால் படத்திற்காக போடப்பட்ட முதலீடு கொஞ்சம் கூட வராததால் மன வருத்தத்தில் இருந்த கங்குவா படத்தின் தயாரிப்பாளருக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் சூர்யா.
இப்படி இருக்க, நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா சமீபத்தில், கங்குவா படத்தை குறித்தும் சூர்யாவை குறித்தும் கேலி செய்து பேசுபவர்களை, கேள்வி மழையால் விளாசி எடுத்தார். அதில், "பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல திரைப்படங்கள் தரம் குறைந்த திரைப்படங்கள் தான், அவைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களே மிகவும் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவைகளை விட என் கணவர் சூர்யாவின் படம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை பார்த்தேன்.
இது எனக்கு அநீதியாக தெரிகிறது. ஏனெனில் இத்திரைப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமலேயே இருக்கலாம். ஆனால், படத்திற்காக மிக கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கிறார்கள். எனினும், சில மோசமான படங்களை விமர்சனம் செய்யாதவர்கள் இந்த படத்திற்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த போது அது என்னை பாதித்தது. அதுமட்டுமல்லாமல், ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் சூப்பர் ஸ்டார், கார்த்திக் சுப்புராஜ் காம்போ..! இந்த முறை என்ன மேஜிக் பண்ண போறாரோ..!
இந்த சூழலில், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சூர்யா, "டேக் இட் ஈசியாக" தனது 45 வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'அய்யனார்' திரைப்படம் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அய்யனார் படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி , நவாசுதீன் சித்திக் , சசிகுமார் , சிம்ரன் , த்ரிஷா கிருஷ்ணன் , மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் , மகேந்திரன் , பாபி சிம்ஹா , குரு சோமசுந்தரம் , ஆடுகளம் நரேன் , முனிஷ்காந்த் , விவேக் சனந்த் , விவேக் சனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான "பேட்ட" திரைப்படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் இசைகள், விஷுவல் காட்சிகள், மற்றும் லைட்டிங் காட்சிகள் என அனைத்தும் அருமையாக இருக்கும்.
இப்படி படங்கள் என்றால் வெறித்தனமாக எடுக்க நினைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரப்படுத்தி உள்ளது.
இந்த படத்தின் டீசரை பார்த்தால் கண்டிப்பாக இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என நினைத்தால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இது அதிரடி சண்டைப்படம் இல்லை, தரமான ரொமான்டிக் படம் எனக் கூறுகிறார். மேலும் டீசரில் பார்க்கும் பொழுது அயன் படத்தில் வருவதை போல் சூர்யா பல கெட்டப்களில் இருப்பதால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மே மாதம் 1ம் தேதி வெளியாகும் படத்தின் அடுத்த அப்டேட்டை ட்ரெண்டிங்கில் கொடுத்துள்ளனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா. இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யா பேசும்போது, " ரெட்ரோ டப்பிங் முடுஞ்சுது, கட்...அண்ட்...ரைட்டு" என பேசுகிறார். அதற்கு பின்னர் டப்பிங்கின் போது சூர்யாவுக்கு அருகில் கார்த்திக் சுப்புராஜ் நின்று கொண்டு இருக்கிறார். இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை Ghibli ஸ்டைலில் மாற்றி செம அப்டேட் கொடுத்துள்ளார்கள்.
இந்த விடியோவானது தற்பொழுது அதிகப்பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நான் வெயிட் லாஸ் பண்ண காரணம் இந்த ஹீரோயின் தான்...! 3 மாதத்தில் நடந்த அதிசயம்..! நடிகை ஜோதிகா பேச்சு..!