உச்சபட்ச கிளாமரில் கயாடு லோஹர்..! மனதை பறிகொடுக்கும் இளசுகள்..!
கிளாமர் உடையில் ஆளை மயக்கும் பார்வையால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார் கயாடு.
டிராகன் திரைப்படத்தின் மூலம் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் கயாடு லோஹர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்த கயாடு லோஹர், கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்த பின் முதலில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவர் படிப்பை முடித்த பின் மாடலிங் பக்கம் செல்ல விருப்பப்பட்டார்.
இதனால் முறையாக மாடலிங்கில் கவனம் செலுத்தி பல மேடைகளை கண்ட கயாடு-க்கு அதன் மூலம் நல்ல அடையாளமும் கிடைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face' என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். அவ்வளவு தான் அதன் பிறகு இவரது முகத்தை பார்த்த இயக்குநர்கள் இவரை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
இதையும் படிங்க: அபிநயாவின் கணவர் பெரிய தொழிலதிபரா...! ஒருவழியாக புகைப்படத்தை பகிர்ந்த அபி..!
இதனை அடுத்து, 2021-ம் ஆண்டு 'முகில்பேடே' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கயாடு. இத்திரைப்படத்தை தொடர்ந்து அந்த ஆண்டிலேயே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பித்தார்.
குறிப்பாக 2022ம் ஆண்டு வெளியான `பத்தொன்பதாம் நூட்டாண்டு' என்ற மலையாள திரைப்படத்திலும் அதே ஆண்டில் தெலுங்கில் வெளியான `அல்லூரி' என்ற திரைப்படத்திலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல், 2023ம் ஆண்டு வெளியான ` ஐ ப்ரேம் யூ' என்ற அந்த மராத்திய திரைப்படத்திலும் நடித்தார்.
இந்த சூழலில் மராத்திய படத்திற்கு பின் பெரிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் ஒருவருடமாக காத்திருந்த லோஹருக்கு தமிழ் சினிமாவிலிருந்து அழைப்பு வந்தது அதன்படி `டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரனின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகும் `இதயம் முரளி' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டார் கயாடு.
அதன் பின் `டிராகன்' திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க அதனை விடாமல் பிடித்து கொண்ட கயாடு அப்படத்தில் தனது நடிப்பை உறுதி படுத்தி இன்று பலகோடி தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
மேலும், கடந்த மாதம் வெளியான வினீத் ஸ்ரீனிவாசன், நிகிலா விமல் ஆகியோர் நடித்திருந்த`ஒரு ஜாதி ஜாதகம்' என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படி இருக்க கயாடு-வின் ஆளை மயக்கும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இதையும் படிங்க: நான் ஃபிட்டாக இருக்க இது தான் காரணம்..! மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்..!