×
 

நான் ஃபிட்டாக இருக்க இது தான் காரணம்..! மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்..!

தான் அழகாகவும் ஃபிட்டாகவும் இருக்க காரணம் இது தான் என உண்மையை உடைத்து பேசியிருக்கிறார் நடிகை கயாடு லோஹர்.

டிராகன்  திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆசிர்வாதத்தால் தற்பொழுது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "STR 49" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கயாடு லோஹர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு கயாடு லோஹர் மீது ரசிகர்கள் தங்களது அன்பை காண்பித்து வருகின்றனர். இவர் மீது அன்புகாட்ட அவரது நடிப்பில் வந்த டிராகன் படம் மட்டும் அல்ல, அப்படத்திற்கு பின் வாரம் ஒருமுறை அவர் தவறாமல் இணையத்தில் பதிவிடும் வார்த்தைகளும் காரணம்.

இதுவரை அவரது எக்ஸ் தளத்தில் அவர் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக டிராகன் படத்திற்கு பிறகு அவர் முதலாவதாக பதிவிட்ட பதிவில், "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும்.

இதையும் படிங்க: ஒரே படத்தில் ஓஹோன்னு வந்த படவாய்ப்பு....! லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தயாராகும் கயாடு லோஹர்...!

இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன்" என கூறி இருந்தார்.

இப்படி ரசிகர்களின் நெஞ்சை வருடி இழுக்கும் அளவிற்கு பேசியவர் அடுத்த ஒருவாரத்தில் மக்களிடம் வசமாக சிக்கினார். ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்வத்தில் பேசிய கயாடு லோஹர், "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush என்றும் 'விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் அட்லீ இயக்கத்தில் சமந்தாவுடன் நடித்த "தெறி தான்" என்றும் கூறி இருந்தார்.

அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர் அப்படி கூறியதால் தனுஷ் ரசிகர்கள் பாதிக்கப்பட்டனர். காரணம் என்னவென்றால், ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தனக்கு பிடித்த ஹீரோ "தனுஷ் தான் என்றும் வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை" எனவும் கூறி இருந்தார். இந்த இரண்டு பதிவையும் எடுத்து வைத்து கேள்வி மேல் கேள்விகேட்டு கயாடுவை காய வைத்தனர் ரசிகர்கள்.

இதனால் ஒருவாரம் இடைவெளி விட்டு அமைதியாக இருந்த கயாடு தனது அடுத்த பதிவை பதிவிட்டார். அதில், டிராகன் படத்திற்காக இயக்குநர் எப்படி தன்னிடம் பேசினார் என்பதை விளக்கமாக கூறியிருந்தார். அதன்படி, "முதலில் ஜூம் கால் மூலமாக 'அஷ்வத் மாரிமுத்து' எனக்கு கதை சொல்லும்போது "கீர்த்தி" என்ற ரோலுக்காக தான் பேசியிருந்தார். இப்படி ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு அஷ்வத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் சோர்ந்து போனேன். அதுமட்டுமல்லாமல் படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன். 

ஆனால் ஒரு மாதம் கழித்து திடீரென என்னை அழைத்த அஷ்வத் "பல்லவி" என்ற புதிய ரோல் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் உள்ள கதை என யோசிக்கவேண்டாம், கண்டிப்பாக படம் வெளியாகும் பொழுது மக்களுக்கு உன்னை பிடிக்கும். அந்த வகையில் தான் உன்னை காட்டுவேன் என கூறினார். சரி, என அஷ்வத் வார்த்தையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் சொன்ன மாறியே என்னை மக்களுக்கு பிடிக்க வைத்திருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஷ்வத் மாரிமுத்து.

எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மேலும், பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை வாழ்க்கையில் பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க மீண்டும் காத்திருக்கிறேன் எனவும் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. என்னை நடிக்க வைத்து தமிழ் மக்களின் அன்பை பெற்று கொடுத்து வசமாக சிக்க வைத்து விட்டார் அஷ்வத் மாரிமுத்து, கண்டிப்பாக உங்கள் அன்புக்கு பிரதிபலனாக படங்களில் நடிப்பேன்" என பதிவிட்டு மீண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றார். 

இப்படி வாரம் தவறாமல் பதிவிட்டு ரசிகர்களது பாராட்டை பெற்று வரும் கயாடு, இந்த வாரமும் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், தான் எடுக்கும் "டயட் டிப்ஸ்" குறித்து விளக்கமாக பதிவிட்டுள்ளார். அதன்படி, "அதிகாலை எழுந்த உடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது யோகா செய்வேன், அதன்பின் அரைமணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், அடுத்த அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வேன்.

அதுமட்டுமல்லாமல் எனது ஸ்டெமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்-அப், புல்-அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகள் ஆகியவை செய்வேன். இதனால் எனது உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனை தொடர்ந்து, தினமும் ஒரு மணி நேரமாவது நடனப் பயிற்சிகளுக்கு என நேரம் ஒதுக்குவேன், இது தவிர ஓய்வு நேரங்களில் டிரக்கிங், டிராவலிங் சென்று எனது பொழுதை கழிப்பேன்" என கூறியுள்ளார்.

இதனை கேட்ட நெட்டிசன்கள், காலையில் எழுந்தவுடன் சமைப்பேன், பின்பு துணி துவைப்பேன், ஆபிசுக்கு கிளம்புவேன், சம்பாரிப்பேன், பிறகு வந்து தூங்குவேன் எங்கள் வாழ்க்கை இப்படியாக தான் மேடம் உள்ளது என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அஷ்வத் மாரிமுத்து நம்பியதால் நல்லா மாட்டிக்கிட்டேன்.. கயாடு லோஹர் போட்ட ஒற்றை பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share