ஒரே படத்தில் ஓஹோன்னு வந்த படவாய்ப்பு....! லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தயாராகும் கயாடு லோஹர்...!
டிராகன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் நடிகை கயாடு லோஹர்.
டிராகன் திரைப்படம் இன்னும் ஓடிடி தளத்திற்கு கூட வெளியிட முடியாத அளவிற்கு இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் தற்பொழுது நிறைய படங்களில் நடிக்கிறார்.
குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் கெஸ்ட் ரோலில் அவருடன் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குநரும் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதில் பிசியாக இருக்கிறார். இப்படி பலரது வாழக்கையை மாற்றிய இப்படத்தின் முக்கிய கதாநாயகியான "கயாடு லோஹரின்" வாழ்க்கையையும் இப்படம் மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.
இதுவரை அவரது எக்ஸ் தளத்தில் அவர் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு நன்றி, புது படங்களில் நடிக்கிறேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். அதில் முதலாவதாக அவர் பதிவிட்ட பதிவில், "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும்.
இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன்" என கூறி இருந்தார்.
இதையும் படிங்க: அஷ்வத் மாரிமுத்து நம்பியதால் நல்லா மாட்டிக்கிட்டேன்.. கயாடு லோஹர் போட்ட ஒற்றை பதிவு..!
ஆனால் அடுத்ததாக சேலத்தில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்வத்தில் பேசிய ஒரே வார்த்தையில் ரசிகர்களிடம் வசமாக சிக்கினார். அங்கு பேசுகையில், "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush என்றும் 'விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் அட்லீ இயக்கத்தில் சமந்தாவுடன் நடித்த "தெறி தான்" என்றும் கூறி இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தனக்கு பிடித்த ஹீரோ "தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை" என கூறிய இரண்டு பதிவையும் எடுத்து வைத்து கேள்வி மேல் கேள்விகேட்டு வந்தனர்.
பின்னர் அமைதியாக இருந்த கயாடு தனது அடுத்த பதிவை பதிவிட்டார் அதில் ஓருபடி மேலாக சென்று, "முதலில் ஜூம் கால் மூலமாக 'அஷ்வத் மாரிமுத்து' எனக்கு கதை சொல்லும்போது "கீர்த்தி" என்ற ரோலுக்காக தான் பேசியிருந்தார். இப்படி ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு அஷ்வத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் சோர்ந்து போனேன். அதுமட்டுமல்லாமல் படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன்.
ஆனால் ஒரு மாதம் கழித்து திடீரென என்னை அழைத்த அஷ்வத் "பல்லவி" என்ற புதிய ரோல் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் உள்ள கதை என யோசிக்கவேண்டாம், கண்டிப்பாக படம் வெளியாகும் பொழுது மக்களுக்கு உன்னை பிடிக்கும். அந்த வகையில் தான் உன்னை காட்டுவேன் என கூறினார். சரி, என அஷ்வத் வார்த்தையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் சொன்ன மாறியே என்னை மக்களுக்கு பிடிக்க வைத்திருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஷ்வத் மாரிமுத்து.
எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மேலும், பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை வாழ்க்கையில் பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க மீண்டும் காத்திருக்கிறேன் எனவும் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. என்னை நடிக்க வைத்து தமிழ் மக்களின் அன்பை பெற்று கொடுத்து வசமாக சிக்க வைத்து விட்டார் அஷ்வத் மாரிமுத்து, கண்டிப்பாக உங்கள் அன்புக்கு பிரதிபலனாக படங்களில் நடிப்பேன்" என பதிவிட்டு மீண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இப்படி இருக்க, டிராகன் வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆசிர்வாதத்தால் தற்பொழுது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "STR 49" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கயாடு லோஹர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை படக்குழுவிடம் இருந்து வரவில்லை என்பதால் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை கயாடு லோஹர்... தமிழில் வரிசை கட்டும் படங்கள்.!