×
 

சூசகமாக கேள்வி கேட்ட ரசிகர்.. சாதுர்யமாக பதில் சொல்லி நழுவிய மஞ்சு வாரியர்..! 

மஞ்சு வாரியாரிடம் சூசகமாக கேள்விகேட்ட ரசிகருக்கு சாதுர்யமாக பதில் சொல்லி இருக்கிறார் நடிகை.

அனைத்து மொழி மக்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த திரைப்படம் என்றால் அது எல்2எம்பூரான். இப்படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் வசூலில் வாரி குவித்து உள்ளது. ஆனால் இப்படம் வெளியான நேரத்தில் அதற்கு போட்டியாக விக்ரமின் வீர தீர சூரன் படம் களமிறக்க பட்டது.

இந்த சூழலில், இப்படம் குறித்து முன்னதாக பேசிய பிருத்விராஜ்,பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ரகசியமாக சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவர்கொண்டா.. புகைப்பட கலைஞர்களிடம் சிக்கி அம்பலம்..! 

இந்த நிலையில், படத்தை  பார்த்த ரசிகர்கள், இந்திய சினிமாவில் அரசியல் சார்ந்த சிறந்த திரில்லர் படமாக எல் 2 எம்புரான் படம் உள்ளது என்றும் டிரெய்லரில் மாஸாக காண்பித்து பின்பு திரையில் தமாசாக கதையை உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றாமல், டிரெய்லரில் காட்டியது போலவே மாஸாக ஆக்ஷன் காட்சிகளை காண்பித்து உள்ளனர். இப்படத்தில், ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பை எங்கும் குறையாத வண்ணம் பாதுகாத்து வைத்து இருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ். ஆனால் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் போக போக படம் மிரட்டி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் வடிவமைப்பு மிகவும் அற்புதமாகவும் மிரட்டுவதாகவும் உள்ளது. படத்தில் கதாநாயகர்களான டோவினோ தாமஸ் மற்றும் மஞ்சுவாரியர் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இப்படம் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியான பான் இந்திய படம் என்பதால், நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் சுவாரசிய விஷயங்களை சேர்த்துள்ளார் சுகுமாரன் என பாராட்டி படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

இப்படி இருக்க, படத்தின் பட்ஜெட் மக்களால் இன்னும் கணக்கிட முடியாமல் இருக்கும் நிலையில், இப்படத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியரின் சம்பளம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் மிகவும் பிரமாதமாக நடித்த கதாநாயகன் மோகன்லால் இப்படத்திற்கு சம்பளமாக ரூ.20 கோடி பெற்று இருக்கிறார். அதே சமயம், படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சு வாரியர் தனது சம்பளமாக ரூ.1.5 கோடியை சம்பளமாக பெற்று உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் எம்பூரான் படத்தின் வெற்றியை தொடர்ந்து மஞ்சு வாரியர் அளித்துள்ள பேட்டியானது தற்பொழுது ட்ரெண்டாகி உள்ளது. அதன்படி, எம்பூரான் படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுவாரியரிடம் ஒருவர், தொடர்ந்து கிடைத்து வரும் அதிக பட வாய்ப்புகளால் உங்களது புகழ் அதிகரித்து வருகிறது. இந்த புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என கேட்டார். 

அதற்கு பதிலளித்த மஞ்சு, நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன், அதுமட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள எந்த மக்களுக்கும் நான் அந்நியமானவள் அல்ல, எந்த நேரத்திலும் விதிகளுக்கு சென்று யார் வீட்டு கதவையும் தட்டி என்னால் தண்ணீர் கேட்டு வாங்கி குடிக்க முடியும். ஏன் என்று கேள்வி கேட்க மாட்டார்கள், இவர் யார் என சந்தேகமும் பட மாட்டார்கள், அந்த அளவிற்கு இப்பொழுதும் நான் மக்களுடன் சகஜமாக பழகி வருகிறேன் என கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: எப்படி உங்களால மனசாட்சியில்லாம பேச முடியுது.. நடிகர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share