ரகசியமாக சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவர்கொண்டா.. புகைப்பட கலைஞர்களிடம் சிக்கி அம்பலம்..!
ஹோட்டலில் ரகசியமாக சந்தித்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறி இருந்தது. குறிப்பாக மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் காதலர் தினம் அன்று வெளியானது.
முழுக்க முழுக்க ஹிந்தியில் உருவாகிய இந்த படம் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகாவும் நடித்து இருந்தனர். இப்பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் ராஷ்மிகாவை புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!
இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, இதுவரை கோலிவுட்டில் கலக்கி வந்த ராஷ்மிகா பல பிரச்சனைகளை கடந்து தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள "சிக்கந்தர்" திரைபடத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் ராஷ்மிகா.
நேற்றைய தினம் படம் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வந்த நிலையில், சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்ததை குறித்து ராஷ்மிகா ஒரு பேட்டியில் "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்றால் அவர் சல்மான் கான் தான், அப்படிப்பட்டவருடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என கூறியிருந்தார்.
இப்படி இருக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், இருவரும் தங்களது காதல் தொடர்பான எந்த அறிக்கையையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா யாருக்கும் தெரியாமல் பிரபல ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்.
அப்போது ராஷ்மிகாவை அடையாளம் கண்ட, அங்கிருந்த போட்டோ கலைஞர்கள், அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். பின் தனது மாஸ்க் மற்றும் தொப்பியை கழற்றி அவர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ராஷ்மிகா ஹோட்டல் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், ஹோட்டல் பின்புறமாக வந்த நடிகரான விஜய் தேவர்கொண்டா மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு ஹோட்டல் உள்ளே சென்றார்.
அவரையும் அங்கு உள்ள போட்டோ கலைஞர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..! ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..!