×
 

மேடையில் கண்கலங்கிய மணிமேகலை...! ஓடி வந்து ஆறுதல் கூறிய பாபா பாஸ்கர்...!

தொகுப்பாளினி மணிமேகலை மேடையில் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் வருத்தமடைய செய்தது. 

ஒருவரின் வளர்ச்சியை கண்டு நாடே பாராட்டுகிறது என்று பலராலும் கூறும் இருவரில் முதலில் அனைவரும் கூறுவது விஜே சித்து என்றால் பெண்களில் மணிமேகலை என்றே சொல்வார்கள். அந்த வகையில், தொலைக்காட்சிகளில் பல அவமானங்களையும் வாழ்க்கையில் பல நெருக்கடிகளையும் சுமந்து இன்று தனது சொந்த காலில் கெத்தாக இருப்பவர் தான் மணிமேகலை என்று சொல்லலாம். 

இவர் 2018ம் ஆண்டு துணை நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்தார். அதுவரை நன்றாக இருந்த அவரது வாழ்க்கையின் சோதனை ஓட்டங்கள் அதன் ஆரம்பமானது. அதன் பின், தனது நகைகளை வைத்து வாழ்கையை தொடங்கிய இவர்களுக்கு முதல் அடி விழுந்தது. என்னவெனில், மணிமேகலை ஹுசைனுக்கு வாங்கி கொடுத்த "காஸ்லி பைக்கை" யாரோ ஒருவர் திருடி செல்ல மனவேதனையின் உச்சிக்கே சென்றனர். இதுவரை அந்த பைக் அவர்களுக்கு கிடைக்கவும் இல்லை. 

இதையும் படிங்க: சினேகா கேட்ட கேள்வி மணிமேகலை சொன்ன பதில் - எதிர்பார்ப்பை கூட்டும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ப்ரோமோ !

இதற்கிடையில், பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் வேலை செய்து கொண்டிருந்த மணிமேகலை, தனது குடும்பத்திற்கென சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காருக்கு சரியாக பணம் கட்டவில்லை என கூறி நான்கு மாதங்களிலேயே அனைவரது முன்னிலையிலும் வங்கி ஊழியர்கள் எடுத்து சென்றனர். பின் வீட்டிற்கும் வாடகை கொடுக்க முடியாமல் சாப்பிடவும் வழிசெலவிற்கும் பணமில்லாமல் இருவரும் சுற்றித்திருந்த நாட்கள் அதிகம் என மணிமேகலை கூறியிருக்கிறார். 

இப்படி இருக்க, தனது சொந்தங்கள் மத்தியிலும், தங்கைகளை அவமதித்தவர்கள் முன்னிலையிலும் நன்றாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என முடிவு எடுத்த மணிமேகலை மீண்டும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின், சின்ன சின்ன நிகழ்ச்சிகளில், அவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைக்க, பின் "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதில் கோமாளியாக அவதாரம் எடுத்தவர் பின் அதே "குக் வித் கோமாளியின் தொகுப்பாளராக களம் இறங்கி அனைவருக்கும் பிடித்த மணிமேகலையாக மாறினார். 

இந்த நிலையில், தனது சபதத்தை கடின உழைப்பால் நிறைவேற்றும் வகையில் சாதாரண காருக்கு பதிலாக விலையுயர்ந்த காரையும், வாடகை  வீட்டுக்கு பதிலாக பண்ணை வீடு, அப்பார்ட்மெண்ட் வீடு என இரண்டு வீடுகளும், இழந்த நகைகளை மீட்டும், 2மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களுடன் இணையத்திலும் சம்பாரித்து இன்று தனக்கென அடையாளத்துடன் மணிமேகலையும் அவரது கணவரும் வாழந்து வருகின்னர். இப்படி சிங்கபெண்ணாக குக் வித் கோமாளியில் வலம் வந்த மணிமேகலை, எனது இத்தனை வருட உழைப்பை ஒரே ஷோவில் முடித்துவிட்டார் பிரியங்கா, அவரால் நான் இந்த தொலைக்காட்சியை விட்டு செல்கிறேன் என சமீபத்தில் கூறியிருந்தார். இந்த வீடியோவால் மணிமேகலைக்கு ஆதரவாளர்கள் பெறுகினர். 

இந்த நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்கு பின் மற்றொரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கும் மணிமேகலை அந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடித்தி சென்று கொண்டிருக்கிறார். இப்படி இருக்க, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் மணிமேகலை அழுதபடி பேசி இருக்கும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அந்த வீடியோவில் மணிமேகலை, "நான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளராக தான் இருந்தேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த பொழுது, இவங்க நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக லீட் கொடுப்பாங்க, அதுவுமில்லாம லிங்க் கொடுப்பாங்க, இவங்கள நிகழ்ச்சியில் கோமாளியாக பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்கனு ரொம்ப ஏளனமா பேசுனாங்க. ஆனா, இப்போ மணிமேகலை சூப்பரா பர்வார்ம் பண்ணுவாங்க, அவங்களுக்கு ஆக்டிங்கும் வருமா என அனைவரும் கூறும் அளவுக்கு இப்போ உயர்ந்து இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது உழைச்சா எது வேணா செய்யலாம்.. புரியுதா"  என கண்கலங்கி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தொழில்ல மத்தவங்களுக்கு வழி விடனும் இல்லனா கஷ்டம்..! பிரியங்கா குறித்து பேசிய டிடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share