×
 

"படம் பக்கா மாஸ்".. சொன்னதை செஞ்சிட்டாரு பிரித்விராஜ்..! `எல் 2: எம்பூரான்' படத்திற்கு குவியும் பாராட்டு...!

`எல் 2: எம்பூரான்' படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனரை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

`எல் 2: எம்பூரான்' படத்தின் இரண்டாம் பாகத்தை ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோரும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர். லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் படக்குழுவினர் சொன்னபடியே இன்று நாடு முழுவதும்வெளியாகி இருக்கிறது. 

இப்படத்தின் டிரெயிலரை ஜெயிலர் பட சூட்டிங்கில் பிஸியான வேளையில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அவரது எக்ஸ் தளத்தில் 'எம்பூரான்' படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டு இருந்தார். அதில் "எனது அருமை மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எம்பூரான்' படத்தின் டிரெயிலரைப் பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். 

இதையும் படிங்க: ரிலீசுக்கு தயார் நிலையில் 'எல் 2: எம்பூரான்'..! வெளியாகும் முன்னே வசூலில் உலக சாதனை..!

இப்படி இருக்க, படத்திற்குண்டான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் தூண்டும் வண்ணம் இரண்டு சம்பவங்கள் நடைப்பெற்றது. ஒன்று படம் வெளியாவதற்கு முன்பாக வசூலில் வெற்றியடைந்தது. இரண்டாவது எல் 2 எம்பூரான் படத்திற்கான சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் பிருத்விராஜ் பேசியது.

அதில், பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை, அவரது ஆசைக்கு நான் தடையாக இருக்கவில்லை அவ்வளவு தான். 

மேலும், படத்தினுடைய பட்ஜெட்டை நாங்கள் வெளியிடவில்லை ஆனால் படத்தை பார்க்கும்பொழுது அதன் பட்ஜெட் என்னவாக இருக்கும் என்பது உங்களால் கணக்கிட முடியும். அதுமட்டுமல்லாமல் பட்ஜெட் என்பது கேமராவிலோ, படம்பிடிக்கும் இடத்திலோ இல்லை அத்தனை நாள் உழைப்பில் உள்ளது.

இப்படம் கிட்டத்தட்ட 143 நாட்கள் எடுக்கப்பட்டது. அத்தனை நாள் படப்பிடிப்பில் பல இயற்கை தடைகள் எங்களுக்கு வந்தது. ஆனால் என்னுடைய படக்குழுவினர் ஒருநாள் கூட அதற்காக ஒய்வு எடுக்கவில்லை கடுமையாக உழைத்தனர்.  இப்படம் உருவாவதற்கு முன்பாக இரண்டு வருடங்களாக இப்படத்தில் வேலை செய்திருக்கிறோம் என கூறியிருந்தார்.

இவை அனைத்தையும் பார்த்த ரசிகர்கள் படத்தை காண ஆவலாக காத்திருந்த அந்த தருணம் தற்பொழுது வந்து உள்ளது. அதன்படி படம் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்திய சினிமாவில் அரசியல் சார்ந்த சிறந்த திரில்லர் படமாக எல் 2 எம்புரான் படம் உள்ளது என்றும் டிரெய்லரில் மாஸாக காண்பித்து பின்பு திரையில் தமாசாக கதையை உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றாமல்,

டிரெய்லரில் காட்டியது போலவே மாஸாக ஆக்ஷன் காட்சிகளை காண்பித்து உள்ளனர். இப்படத்தில், ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பை எங்கும் குறையாத வண்ணம் பாதுகாத்து வைத்து இருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ். ஆனால் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் போக போக படம் மிரட்டி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் வடிவமைப்பு மிகவும் அற்புதமாகவும் மிரட்டுவதாகவும் உள்ளது. படத்தில் கதாநாயகர்களான டோவினோ தாமஸ் மற்றும் மஞ்சுவாரியர் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இப்படம் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியான பான் இந்திய படம் என்பதால், நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் சுவாரசிய விஷயங்களை சேர்த்துள்ளார் சுகுமாரன்.   

இயக்குநர் பிருத்விராஜ் படம் பார்த்த பின் படத்தின் பட்ஜெட் என்னவாக இருக்கும் என நீங்களே கொள்வீர்கள் என்று குறியிருந்ததை அடுத்து படத்தின் பட்ஜெட் என்னவாக இருக்கும் என்பதில் ரசிகர்கள் போட்டி போட்டு கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: எல்2: எம்பூரான் திரைப்படத்தின் அபார வெற்றி..! பட்ஜெட்டை சொல்லி வாய் பிளக்க வைத்த பிருத்விராஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share