எல்2 எம்பூரான் படத்திற்கு மோகன்லால் வாங்கிய சம்பளம்..! மஞ்சு வாரியருக்கு இவ்வளவுதான் சம்பளமா..?
எல்2 எம்பூரான் பட வெற்றியை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
அனைத்து மொழி மக்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த திரைப்படம் என்றால் அது எல்2எம்பூரான். இப்படம் வேற்று வெளியாவதற்கு முன்பே டிக்கெட் வசூலில் வாரி குவித்து உள்ளது. ஆனால் இப்படம் வெளியான நேரத்தில் அதற்கு போட்டியாக விக்ரமின் படம் களமிறக்க பட்டது.
இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் படம் தான் "வீர தீர சூரன்". இப்படம் எல்2 எம்புரானுடன் வெளியாக இருந்த நிலையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்தது.
பின்பு மாலையில் இப்படத்தின் இயக்குநர் அருண்குமார், படத்தின் ரீதியாக காலையில் இருந்து பல இன்னல்களை சந்தித்த விக்ரம் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு படத்தின் தடுங்களுக்கு வருந்துவதாக கூறி படத்தை நேற்று மாலை வெளியிட்டனர். இப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் விக்ரமை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய மோகன்லால்...! "மம்முட்டி பூஜை ரசிது" குறித்து பதிலடி கொடுத்த கோவில் நிர்வாகம்...!
இப்படி இருக்க, "வீர தீர சூரனை" போல், ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோரும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள `எல் 2: எம்பூரான்' படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த சூழலில், இப்படம் குறித்து முன்னதாக பேசிய பிருத்விராஜ்,பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், இந்திய சினிமாவில் அரசியல் சார்ந்த சிறந்த திரில்லர் படமாக எல் 2 எம்புரான் படம் உள்ளது என்றும் டிரெய்லரில் மாஸாக காண்பித்து பின்பு திரையில் தமாசாக கதையை உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றாமல், டிரெய்லரில் காட்டியது போலவே மாஸாக ஆக்ஷன் காட்சிகளை காண்பித்து உள்ளனர். இப்படத்தில், ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பை எங்கும் குறையாத வண்ணம் பாதுகாத்து வைத்து இருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ். ஆனால் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் போக போக படம் மிரட்டி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் வடிவமைப்பு மிகவும் அற்புதமாகவும் மிரட்டுவதாகவும் உள்ளது. படத்தில் கதாநாயகர்களான டோவினோ தாமஸ் மற்றும் மஞ்சுவாரியர் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இப்படம் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியான பான் இந்திய படம் என்பதால், நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் சுவாரசிய விஷயங்களை சேர்த்துள்ளார் சுகுமாரன் என பாராட்டி படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இப்படி இருக்க, படத்தின் பட்ஜெட் மக்களால் இன்னும் கணக்கிட முடியாமல் இருக்கும் நிலையில், இப்படத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியரின் சம்பளம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் மிகவும் பிரமாதமாக நடித்த கதாநாயகன் மோகன்லால் இப்படத்திற்கு சம்பளமாக ரூ.20 கோடி பெற்று இருக்கிறார். அதே சமயம், படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சு வாரியர் தனது சம்பளமாக ரூ.1.5 கோடியை சம்பளமாக பெற்று உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ரிலீசுக்கு தயார் நிலையில் 'எல் 2: எம்பூரான்'..! வெளியாகும் முன்னே வசூலில் உலக சாதனை..!