கூலி படத்தில் இணையும் புதிய நடிகை...! லோகேஷ் கொடுத்த புதிய ட்ரீட்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மாறிய நடிகை தற்பொழுது சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
சினிமாவில் ஆண்கள் தனது திறமையால் எவ்வளவோ முயற்சிகளை செய்து முன்னேறி இருக்கிறார்கள். ஆனால் அதே சினிமாவில் பெண்கள் உயர்வது என்பது சாமர்த்தியமான ஒன்று மட்டுமல்ல அசாத்தியமான ஒன்றாகும். ஏனெனில் முதலில் சின்னத்திரையில் நடிக்க வருவதற்கே நிறைய அடிஷன்களை கடக்கும் ஹீரோயின்கள், அதில் எப்படியாவது முட்டி மோதி வெற்றி பெற்று,பின் சின்னத்திரை சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கிடைக்கும் கேரக்டரில் நடிகையாக வாழ்ந்து வந்து, வெள்ளித்திரையின் வாய்ப்புக்காக காத்திருந்து வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே.
உதாரணத்திற்கு, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான "கலக்கப்போவது யாரு" என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களான சரத் மற்றும் தீனா ஆகிய இருவருக்கும் உதவியாக நடிக்க வந்தவர் தான் கேபிரில்லா. சரத் மற்றும் தீனா உடன் 'சந்திரமுகி' பேயாக வந்து தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கேபிக்கு, நயன்தாரா படத்திலும் பேயாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலிலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து பிரபலமானர். இப்படி சின்னத்திரை வெற்றிக்கு கேபியை உதாரணமாக சொல்வது போல், வெள்ளித்திரைக்கு "திரிஷா மற்றும் காஜல் அகர்வால்" போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். இவர்களும் பின்னணி துணை நடிகைகளாக இருந்து இன்று முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான்.
இதையும் படிங்க: 'கூலி' படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற லோகேஷ் கனகராஜ் 'பர்த்டே பார்ட்டி'...! வாழ்த்து கூறி வரும் பிரபலங்கள்..!
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமானவர் தான் மோனிஷா. தனது காமெடி திறமையால் மக்கள் மனதில் அறியப்பட்டவர், சிவாங்கி போல் தன்னை மாற்றி "அண்ணே.." என்று குரல் மாற்றி பேசி ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இருந்த இவருக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயனோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் "வீரமே ஜெயம்" என்ற ஒற்றை வார்த்தையில் ஆரம்பித்து, படத்தின் கதை முழுவதும், குரலை வைத்தே மாஸாக தயாரித்து வெளியான 'மாவீரன்' திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு மோனிஷாவுக்கு கிடைத்தது. தனது அண்ணனுக்கு மிகவும் பிடித்த தங்கையாகவும், அண்ணனை என்றும் விட்டுக் கொடுக்காத அழகான தங்கையாகவும் அப்படத்தில் நடித்து தனக்கான காலடித்தடத்தை வெள்ளித்திரையில் படைத்தவர்.
இப்படத்தில் மோனிஷாவின் நடிப்பை பார்த்து பிடித்துப் போன இயக்குனர் ஹச்.வினோத், தற்பொழுது கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சினிமா பயணத்தில் நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மோனிஷாவை நடிக்க வைத்து இருக்கிறார்.
இப்படி தனது கெரியரில் சின்னத்திரையில் ஆரம்பித்து வெள்ளித்தறையில் தடம் பதித்த மோனிஷா, இதுவரை சினிமா நட்சத்திரங்களான நடிகர் விஜயுடனும் சிவகார்த்திகேயனுடனும் தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இவரது கடின உழைப்பிற்கு பலனாக மீண்டும் ஒரு வாய்ப்பு அவருடைய இல்லத்தின் கதவை தட்டி உள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெறித்தனமாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து உருவாகி வரும் "கூலி" திரைப்படத்தில் நடிகை மோனிஷாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது.
அந்த வகையில், தற்பொழுது சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை மோனிஷா என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கூலி' படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற லோகேஷ் கனகராஜ் 'பர்த்டே பார்ட்டி'...! வாழ்த்து கூறி வரும் பிரபலங்கள்..!